ஹைதராபாத் ஐஐபி-யில் பணிபுரிய விருப்பமா?

Posted By:

சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலுள்ள இன்சூரன்ஸ் இன்பர்மேஷன் பியூரோ ஆஃப் இந்தியா நிறுவனத்தில்(ஐஐபி) பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

ஹைதராபாத் ஐஐபி-யில் பணிபுரிய விருப்பமா?

மேலாளர், அனலிஸ்ட், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இங்கு காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைனில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யவேண்டும்.

குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் விவரம் ஐஐபி இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

வயதுச் சலுகை, சம்பளம், கல்வித் தகுதி போன்ற விவரங்களுக்கு ஐஐபி-யின் இணையதளமான https://iib.gov.in/IIB/homePageAction.do?method=loadHomePage1-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
IIB, Hyderabad invited applications from the eligible candidates for the posts of Manager, Analyst and Administrative Officer for various disciplines/ depts. The eligible candidates can apply for the respective posts through Online via email to the particular email ID on or before 12 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia