இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை.யில் குவியும் விண்ணப்பங்கள்

Posted By:

சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில்(IGNOU) படிப்புகளில் சேர லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தேசிய அளவில் பல்வேறு பட்டப் படிப்புகளை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. நடப்புக் கல்வியாண்டில் பயில்வதற்கான விண்ணப்பங்கள் நாள்தோறும் ஏராளமாக குவிந்து வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 3 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை.யில் குவியும் விண்ணப்பங்கள்

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 29 சதவீதம் அதிகமாகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஆண்டில் பல்கலைக்கழகத்தில் சேர ஆன்-லைன் முறையை அறிமுகம் செய்தது பல்கலைக்கழகம். ஆன்-லைன் மூலம் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆன்-லைனில் மட்டும் 68 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

English summary
"The Indira Gandhi National Open University (IGNOU) university has received a record three lakh applications for the July 2015 cycle, and there has been an increase of more than 29 per cent as compared to last year," a university official said. The university had introduced the online application process this year, has registered an increase of 29 percent in the number of candidates who have applied.According to the university official "The university had come up with a pan-India online admission system earlier this year and July 2015 cycle was the first to accept applications through this system"

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia