சென்னை: வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் வெளிநாடுகளில் 9 இடங்களில் மையங்களைத் தொடங்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) முடிவு செய்துள்ளது.
வெளிநாடுகளில் வாசிக்கும் மாணவர்கள் கல்வி பயில ஏதுவாக இந்த மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கல்வி மையங்களைத் திறந்துவைத்து அங்குள்ள மாணவர்கள் பட்டப்படிப்பு பயில இந்திரா காந்தி பல்கலைக்கழகம் சேவை செய்து வந்தது. ஆனால் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்னதாக 84 நாடுகளிலுள்ள கல்வி மையங்களை மூட பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
இதன்மூலம் வெளிநாடுகளிலுள்ள மாணவர் இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் படிப்பது முடியாத காரியமாகிவிட்டது.
இந்த நிலையில் 84 நாடுகளில் மூடப்படவிருந்த கல்வி மையங்களின் எண்ணிக்கையை 29 ஆக குறைக்க தற்போது பல்கலை. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இருந்தபோது 2013-க்கு முன்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவர்களுக்கு வகுப்புகள், தேர்வுகள் நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் வளைகுடா நாடுகள், தெற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் 9 புதிய கல்வி மையங்களைத் தொடங்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது ஜனவரி 2016 முதல் செயல்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் தற்போது 40 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












