இக்னோ பல்கலை.யில் தொலைதூர கல்வி சேர்க்கை மார்ச் 10 வரை நீட்டிப்பு

தொலைதூர கல்வி ஜனவரி பருவ மாணவர் சேர்க்கை மார்ச் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திரா காந்தி திறந்தநிலை (இக்னோ) பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் பல்கலைக்கழகமான இக்னோ தொலைதூரக்கல்வி திட்டம் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஜனவரி பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மார்ச் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இக்னோ பல்கலை.யில் தொலைதூர கல்வி சேர்க்கை மார்ச் 10 வரை நீட்டிப்பு

இக்னோவில் பிஇ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம்.

மேலும் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இக்னோவின் ஆன்லைன் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The last date for fresh admission and re-registration to all programmes of the Indira Gandhi National Open University (IGNOU) for the January 2024 admission session has been extended till March 10. The University offers programmes in the open and distance learning and online mode. Candidates may submit their applications for the ODL programmes at https://ignouadmission.samarth.edu.in and at https://ignouiop.samarth.edu.in for online programmes.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+