இந்திரா காந்தி மகளிர் பல்கலை.யில் எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள்...!!

Posted By:

டெல்லி: டெல்லியிலுள்ள இந்திரா காந்தி தொழில்நுட்ப மகளிர் பல்கலைக்கழகத்தில் (IGDTUW) எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. மொபைல் அண்ட் பர்வேசிவ் கம்ப்யூட்டிங், ரொபாட்டிக்ஸ், பிஎச்.டி படிப்பில் என்ஜினீயரிங் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் சயின்ஸஸ், ஹியூமானிட்டீஸ் பிரிவுகளில் படிப்பு படிக்கலாம்.

இந்திரா காந்தி மகளிர் பல்கலை.யில் எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள்...!!

எம்.டெக் படிக்க விரும்புபவர்கள், பி.டெக், பி.இ ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். பிஎச்.டி. படிக்க விரும்புபவர்கள் எம்.இ. எம்.டெக் படிப்புகளில் ஏதாவது ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இந்தப் படிப்புகளுக்கு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும். மேலும் கேட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இருக்கும்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். பிஎச்.டி படிப்புகளுக்கு விண்ணப்பங்களை ஜூன் 12-ம் தேதிக்குள்ளும், எம்.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை ஜூன் 20-ம் தேதிக்குள்ளும் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://www.igit.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப http://igdtuwadmission.nic.in/publicinfo/public/home.aspx என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.

English summary
Indira Gandhi Delhi Technical University for Women (IGDTUW), New Delhi has invited applications for admission to full time and part time M.Tech/Ph.D Programmes for the academic session 2016. Admissions at IGDTUW will be granted in the following programmes: Master of Technology (M.Tech): Mobile & Pervasive Computing VLSI Design Information Security Management Robotics & Automation Doctor of Philosophy (Ph.D) Engineering Computer Application Sciences & Humanities programmes

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia