10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது...!!

Posted By:

டெல்லி: 10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளன.

இந்த முடிவுகளை சிஐஎஸ்இசி கல்வி வாரியம் வெளியிடவுள்ளது. இதுகுறித்து சிஐஎஸ்இசி கல்வி வாரியத்தின் தலைமைச் செயலல் அதிகாரியும், செயலருமான கெர்ரி அராத்தூன் கூறியதாவது: தேர்வு முடிவுகளை www.cisce.org/ என்ற இணையதளத்தில் காணலாம்.

10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்:  மே 6-ல் வெளியாகிறது...!!

மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளை அறியமுடியும்.

முடிவுகளை அறிய விரும்புபவர்கள் ஐசிஎஸ்இ அல்லது ஐஎஸ்சி என டைப் செய்து ஐடி கோட் எண்ணை டைப் செய்து 09248082883 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியமுடியும்.

தேர்வு முடிவுகளுக்காக எல்ஐசிஆர் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் வேகமாக முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.

மே 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முடிவுகளை அறியலாம் என்றார் அவர்.

English summary
The results of the ICSE Class 10 and ISC Class 12 examinations 2016 will be announced on May 6, two weeks earlier than previous years. The results will be available on the career portal of the council and its website as well as through SMS. To receive the Indian Certificate of Secondary Education (ICSE) or Indian School Certificate (ISC) results by SMS, the candidate will require to type ICSE or ISC followed by their seven digit unique ID code and send the message to 09248082883.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia