ஐஎஸ்சிஇ பிரிவில் 11-ம் வகுப்புக்கு வருகிறது புதிய பாடத் திட்டம்

சென்னை: ஐசிஎஸ்இ கல்வியில் 11-ம் வகுப்புக்கு புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐசிஎஸ்இ பள்ளிகளை நிர்வகிக்கும் தி கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்ட்டிபிகேட் எக்ஸாமினேஷனஸ்(சிஐஎஸ்சிஇ) இந்த முடிவை எடுத்துள்ளது. 11-ம் வகுப்பில் இயற்பியல், வேதியல், கணிதம், உயிரியல் பாடங்களுக்கு புதியப் பாடத் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

ஐஎஸ்சிஇ பிரிவில் 11-ம் வகுப்புக்கு வருகிறது புதிய பாடத் திட்டம்

சிஐஎஸ்சிஇ தலைமைச் செயல் அதிகாரியும், செயலருமான கெர்ரி ஆரத்தூன் கூறியதாவது: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத் திட்டங்களில் சமச்சீரைக் கொண்டு வருவதற்காக இந்தத் திட்டத்தை அமல் செய்யவுள்ளோம்.

சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் சிறிய வகுப்புகளிலும், அதன் பின்னர் அதே பாடத் திட்டங்கள் ஐசிஎஸ்இ பாட்டத் திட்டத்தில் உள்ளன. எனவே சமச்சீரைக் கொண்டு வருவதற்காக இதை அமல் செய்யவுள்ளோம்.

மேலும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகள் தயாராவதற்காக கேள்வித்தாள்களை சிறப்பான முறையில் தயார் செய்கிறோம். இது சிபிஎஸ்இ கேள்வித் தாள்களைப் போன்றே கடினமாக அமையும் என்றார் அவர்.

ஐசிஎஸ்இ கல்விக்குத் தலைமையகம் புதுடெல்லியில் உள்ளது. நாடு முழுவதும் ஐசிஎஸ்இ கல்வித் திட்டத்தின் கீ ழ் 2 ஆயிரம் பள்ளிகரள் உள்ளன. சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த வழியில் கல்வி பயின்று வருகின்றன. ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வுகள் வடகு, கிழக்கு மண்டலங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் மாணவர்களும், தென் மண்டலத்தைச் சேர்ந்த 35 ஆயிரம் மாணவர்களும் எழுதுகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Council for the Indian School Certificate Examinations (CISCE) is contemplating to revise the syllabus of class 11. The new syllabus will be introduced in the subjects of physics, chemistry, mathematics and biology . Speaking to TOI Gerry Arathoon, chief executive and secretary of CISCE, on Saturday said: "The council will also bring uniformity to the syllabus of CBSE and ICSE syllabi, which vary a little in terms of sequence of chapters. Earlier, some chapters in CBSE were taught and later in ICSE; but with standardization in syllabus, the chapters in both boards will run parallel."
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X