கொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் பொருளாதார ரீதியாகச் சரிவைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களும் கூட தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழலில் அவர்களை பணியிலிருந்து நீக்குவது, கட்டாய விடுமுறையில் ஊதியத்தைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி சிறப்பித்துள்ளது.
அதாவது, ஐசிஐசிஐ வங்கி பணியாளர்களில் சிறப்பாக பணியாற்றிய 80 ஆயிரம் ஊழியர்களின் ஊதியத்தை 8 சதவிகிதம் வரையில் உயர்த்தி வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் அறிவிப்பின் படி இந்த ஊதிய உயர்வு என்பது ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












