பெங்களூரு ஐசிஏஆர்- ஐஐஎச்ஆர்-ல் வேலை செய்ய ஆசையா இருக்கா?

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள ஐசிஏஆர்-ஐஐஎச்ஆர்(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹார்ட்டிகல்ச்சுரல் ரிசர்ச்-ல் பல்வேறு பணியிடங்கள் காத்திருக்கின்றன.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் ஐசிஏஆர்-ஐஐஎச்ஆர் இயங்கி வருகிறது. இதன் தலைமையகம் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெசர்கட்டாவில் உள்ளது. இந்த இன்ஸ்டிடியூட் தன்னாட்சி அமைப்பாகும். வேளாண், தோட்டக் கலைத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

பெங்களூரு ஐசிஏஆர்- ஐஐஎச்ஆர்-ல் வேலை செய்ய ஆசையா இருக்கா?

இங்கு ரிசர்ச் அசோசியேட், சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் டெக்னிக்கல், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் PI/Co-PI, Indian Institute of Horticultural Research, Hessaraghatta Lake Post, Bengaluru-560 089 என்ற முகவரிக்கு டிசம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை 2016 ஜனவரி 5-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு http://www.iihr.res.in/institution என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia