நாடு முழுவதுமுள்ள பொதுவுடமை வங்கிகளின் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் அறிவிப்பு

Posted By:

வங்கி தேர்வு எழுதுவோர்க்கான ஒரு அறிவுப்பு இதுபயனுள்ள அறிவிப்பாகும். இது ஐபிபிஎஸ் அறிவித்துள்ளது. ஐபிபிஎஸ் வங்கி தேர்வு வாரியமானது இந்தாண்டு 2017-2018 ஆம் ஆண்டு வங்கிகளில் 14ஆயிரத்து192 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அலகபாத் வங்கி , இந்தியன் வங்கி உள்ளிட்ட இந்திய பொதுவுடமை  வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களின் விவரங்களை அறிவித்துள்ளது . அதன் விவரங்களின் படி பொது வங்கிகளான 45 வங்கிகளில் காலிப்பணியடங்கள் அறிவித்துள்ளது.

வங்கி தேர்வாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஐஐபிஎஸ் தேர்வுக்காண காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இண்டிஸ்டியூட் ஆஃப் பேங்கிங் பர்சனல் செலகஸன் (ஐபிபிஎஸ்) விடுத்த அறிக்கையில் 2017 -2018 ஆம் ஆண்டு வங்கிகளுக்கான குரூப் ஏ அலுவலக அதிகாரி, குரூப் பி அலுவலக உதவியாளர்கள் பணிகள் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பேங்கிங் தேர்வானது முதல் நிலை மற்றும் மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கொண்டது ஆகும்.
எழுத்து தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், கணிதத்திறன், ஆராயும் திறன், ஆகிய நான்கு பகுதிகளில் (ஆப்ஜெக்டிவ் )முறையில் கேட்கப்படும் .

தகுதி:

அலுவலக உதவியாளர் ஏதேனும் பட்டம் பெற்று  உள்ளூர் மொழியறிவு போதுமானது ஆகும் . அதிகாரி பணிக்கு இளங்கலை மற்றும் வணிகம் , சிஏ , மேலாண்மை ,கால்நடை அறிவியல் தோட்டக்கலை, வனவியல், தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம், மீன் வளர்ப்பு , வேளாண் விற்ப்பனை உள்ளுர் மொழி அறிவுடையோர் போன்றோர் விண்ணப்பிக்கலாம் .

வயது 01.07.2017 முதல் கணக்கிடப்படும் மற்றும் இடஒதுக்கீடு பெறுபவர்கள் எந்த மாற்ற்மும் இல்லாமல் பெறலாம்.

சம்பளம் விவரம் :

அலுவலக உதவியாளர் ரூபாய் 19000 முதல் 22000 பெறலாம். அதிகாரி பணிக்கு 30000 முதல் 47000 வரை அதிகாரிகள் கிரேடுகளுக்கேற்ப மாறுபடும் .இந்த ஐபிபிஎஸ் வங்கிகளுக்கான அறிவிப்பில் பாரத் ஸ்டேட் வங்கி இந்த தேர்வில் பங்கேற்காது  இது நாட்டில் அதிக வாடிக்கையாளர்கள்  கொண்ட வங்கி  என்பதால் தனியாக தேர்வு நடத்தி பணியாளர்களை நியமிக்கும்.விரைவில் வங்கி  தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் . 

English summary
above article tell about ibbs declaration of bank vacancy list

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia