கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்: ஐஏஎஸ் பயிற்சியாளர்கள்!!

Posted By:

சென்னை: கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்(கேஐஎஸ்எஸ்) மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது என்று ஐஏஎஸ் பணிக்குத் தேர்வாகி பயிற்சி பெறுபவர்கள் தெரிவித்தனர்.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் கேஐஎஸ்எஸ் வளாகம் உள்ளது. இங்கு 25 ஆயிரம் பழங்குடியின மாணவர்கள் இலவசக் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு உணவு, இருப்பிடம் ஆகியவற்றை கேஐஎஸ்எஸ் வழங்கி வருகிறது.

கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்: ஐஏஎஸ் பயிற்சியாளர்கள்!!

மேலும் இங்கு உயர் கல்வி நிறுவனமான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) பல்கலைக்கழகமும் உள்ளது. இந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வருபவர் டாக்டர் அச்சுதா சமந்தா.

இந்த நிலையில் ஐஏஎஸ் பணிக்குத் தேர்வாகி பயிற்சி பெறும் 18 அதிகாரிகள் கேஐஎஸ்எஸ் வளாகத்துக்கு வந்தனர். இவர்கள் அனைவரும் முசௌரியிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் (எல்பிஎஸ்என்ஏஏ) பயில்பவர்கள்.

ஐஏஎஸ் பயிற்சியில் உள்ளவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகம் தொடர்பான விஷயங்களை நேரடியாக அறிந்துகொள்ளும் முறை வழக்கில் உள்ளது. அதன்படியே அவர்கள் புவனேஸ்வருக்கு வந்தனர்.

கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்: ஐஏஎஸ் பயிற்சியாளர்கள்!!

அங்கு வழங்கப்படும் இலவசக் கல்வித் திட்டத்தைப் பார்த்த அவர்கள் இது மாணவர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதமான இன்ஸ்டிடியூட் என்று புகழ்ந்தனர்.

அவர்களுடன் எல்பிஎஸ்என்ஏஏ இணை இயக்குநர்கள் தேஜ்வீர் சிங், ஜஸ்பிரீத் தல்வார் ஆகியோரும் வந்திருந்தனர்.

English summary
A team of 18 Indian Administrative Service (IAS) probationers, along with two Joint Directors Tejveer Singh and Jaspreet Talwar of Lal Bahadur Sashtri National Academy of Administration (LBSNAA), Mussoorie, visited Kalinga Institute of Social Sciences (KISS) on February 2, 2016. KISS was recently included as the only NGO in Odisha in the list of places in the winter study tour-cum-Bharat Darshan of LBSNAA’s annual training programme for IAS probationers. It is an important component of the phase-1 training programme for IAS probationers. KISS has been included from the current year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia