'திறமைக்கு வறுமை ஒரு தடையில்லை' ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி!

By Kani

யு.பி.எஸ்.சி நடத்தும் ஒங்கிணைந்த தேர்வுகளில் இந்திய ஆட்சி பணி என்னும் ஐஏஎஸ் அதிகாரி பணி இன்றைய இளைஞர்களின் கனவு பணி ஆக இருக்கிறது. ஐஏஎஸ் பணி உட்பட மொத்தம் 23 பணிகளுக்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த தேர்வுதான் இந்திய குடிமைப் பணி தேர்வு. எந்த ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

'திறமைக்கு வறுமை ஒரு தடையில்லை' ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி!

 

ஆண்டுக்காண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் இத்தேர்வு எழுதுகின்றனர். தமிழ் வழியில் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையும் கூடிக் கொண்டுதான் இருக்கிறது.

இத்தேர்வுக்கு பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சிகரம் ஐஏஎஸ் பயிற்சி மையம், இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான இலவச பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் வரும் 13-05-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 24 மற்றும் அதற்கும் கீழ் இருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு தேதி: 20-05-2018

தேர்வு நேரம்: காலை 9.45 முதல் பகல் 1 மணி வரை

தேர்வு மையம்: சேலம், ஈரோடு, கோவை, கரூர், மதுரை

நுழைவுத்தேர்வு முடிவுகள்: 11-06-2018

பயிற்சி வகுப்பு துவங்கும் நாள்: 02-07-2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-05-2018

பயிற்சி கொடுக்கும் இடம்: சங்கர் ஐஏஎஸ் அகாடமி, சென்னை.

நுழைவுத்தேர்வு விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சந்தேகம் இருப்பின் sigaramias@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 9840794429 என்ற செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IAS academy invites applications for free coaching
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X