சென்னை : அகஸ்தியா ஜெயிஸ்வால் ஐதராபாத்தைச் சார்ந்தவர். அங்குள்ள யூசுப்குடா செயிண்ட் மேரீஸ் ஜூனியர் கல்லூரியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
ஐதராபாத்தைச் சார்ந்த சிறுவன் அகஸ்தியா ஜெயிஸ்வால், இவருடைய வயது தற்போது 11. இவர் தன்னுடைய 9 வயதில் 10ம் வகுப்புத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இப்போது 12ம் வகுப்புத் தேர்வினை யூசுப்குடா செயிண்ட் மேரீஸ் ஜூனியர் கல்லூரியில் முடித்துள்ளார். தன்னுடைய 11 வயதிலேயே 12ம் வகுப்புத் தேர்வினை முடித்து வெற்றிக் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வரம்பு கட்டுப்பாடு
தெலுங்கான மாநிலத்தைப் பொறுத்தவரை தேர்வு எழுதுவதற்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. தமிழகத்தைப் போன்று எந்தவித வயது வரம்புக் கட்டுப்பாடும் தேர்வு எழுதுவதில் தெலுங்கான மாநிலத்திற்கு கிடையாது. அதனால் தன்னுடைய 11 வயதிலேயே அகஸ்தியா ஜெயிஸ்வால் 12ம் வகுப்புத் தேர்வினை எழுதியுள்ளார்.
மகத்தான சாதனை
தன்னுடைய 9வயதில் 10ம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது 11 வயது நிரம்பிய அகஸ்தியா ஜெயிஸ்வால் 12ம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தார். நேற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் அவர் 63% மார்க்குகளுடன் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். படிப்பிற்கு வயது தடை இல்லை என்பது உண்மைதான். ஆனால் குறித்த வயது வரம்பிற்கு முன்னரே தேர்வில் வெற்றி பெறுவது என்பது மகத்தான சாதனையாகும்.
தந்தை அஷ்விணி குமார்
அகஸ்தியா ஜெயிஸ்வால் அவரின் தந்தை அஷ்விணி குமார், தெலுங்கான மாநிலத்தில் 11 வயதிலேலே 12ம் வகுப்பு முடித்த பெருமை என் மகனை மட்டும் தான் சாரும். வேறு யாரும் இவ்வளவு சிறுவயதிலேயே 12ம் வகுப்பு முடித்ததில்லை. இந்த அசாத்திய சாதனைக்குரிய பெருமை என் மகனை மட்டும் தான் சேரும் எனக் கூறுகிறார்.
டாக்டர் அகஸ்தியா ஜெயிஸ்வால்
தன்னுடைய 11 வயதிலேயே 12ம் வகுப்பு முடித்த அகஸ்தியா ஜெயிஸ்வால் எதிர்காலத்தில் டாக்டர் ஆவதுதான் என் கனவு எனக் கூறியிருக்கிறார். 11 வயதிலேயே பிளஸ் 2 முடித்தவிட்டார். அவரது அடுத்த பிளான் டாக்டர் ஆவதுதான். விரைவில் அகஸ்தியா ஜெயிஸ்வால் டாக்டர் அகஸ்தியா ஜெயிஸ்வால் ஆகிவிடுவார் எனபதிலும் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications












