பிளஸ்-2 மாணவர்கள் எப்போது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம்...!!

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாயின. தேர்வு முடிவுகளை மாணவச் செல்வங்கள் http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்நிலையில் தேர்வெழுதிய 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்தன. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

பிளஸ்-2 மாணவர்கள் எப்போது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம்...!!

இதைத் தொடர்ந்து மாணவர்கள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ம்தேதி முதல் 13-ம் தேதி வரை நடந்தது. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000-த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து விடைத்தாள் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும், மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்புப் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை, தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவீதம் அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தேர்வெழுதிய 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளோம். முடிவுகளை http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களின் செல்போன், பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9-ம் தேதி முதல் வழங்கப்படும்.
அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மறுமதிப்பீடு, மறு கூட்டல் நாளை முதல் தொடங்குவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
உடனடி தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும். இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Directorate of Government Examinations (DGE) on May 6 announced the Tamil Nadu Class 12 result. The TN HSC plus 2 result 2024 can be checked at dge.tn.gov.in and tnresults.nic.in. Students Temporary Mark sheets will be issued from May 9. About 94.56% students pass TN HSE +2 exams. Around eight lakh students who took the TN Class 12 board 2024 exams can check their TNDGE Class 12 result using their roll number and date of birth.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+