மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி! வருகிறது புதிதாக 3 ஐஐடிக்கள்!!

Posted By:

சென்னை: புதிதாக 3 ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களை அமைக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம். இந்த புதிய ஐஐடிகள் ராஞ்சி, நாக்பூர், புனே நகரங்களில் அமைக்கப்படும். பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் இந்த ஐஐடிக்கள் அமைக்கப்படும்.

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி! வருகிறது புதிதாக 3 ஐஐடிக்கள்!!

இந்த ஐஐடி-க்களில் மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு இடம்பெறும். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு நிபுணர்களை உருவாக்க இந்த ஐஐடிக்கள் உதவும் என்று மத்திய அரசு நம்புகிறது.

இதற்காகவே இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது மத்திய அரசு. இதற்காகவே டாடா கன்சல்ட்டன்சி சர்வீஸஸ், டாடா மோட்டார்ஸ், ஏடிசிசி இன்போகேட், ஹப்டவுன் ஆகியவற்றுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனங்களுடன் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை செயலர் வினய் ஷீல் ஓபராய் கையெழுத்திட்டார்.

ஐஐடி ராஞ்சி விரைவில் தகொடங்கப்படும். இது தற்போது ராஞ்சியிலுள்ள ஓல்டு ஜுடிசியல் அகாதெமியில் செயல்படும். அதேபோல மற்ற ஐஐடிகளும் உடனடியாகத் தொடங்கப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இடங்களை ஒதுக்கித் தந்துள்ளன என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது..

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia