கல்வி சார்ந்த மொபைல் ஆப்ஸ்கள்: அறிமுகம் செய்தது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை

Posted By:

சென்னை: கல்வி சார்ந்த மொபைல் ஆப்ஸ்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா பிரசாரத்தின் ஒருபகுதியாக இந்த மொபைல் ஆப்ஸ்களை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பாடங்களை ஆன்-லைனிலேயே மாணவர்கள் பெற முடியும்.

கல்வி சார்ந்த மொபைல் ஆப்ஸ்கள்: அறிமுகம் செய்தது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை

மேலும் தங்கள் குழந்தைகளின் கல்வித் திறன், செயல்பாடு, பள்ளி வருகைப் பதிவேடு விவரங்களையும் பெற்றோர்கள் அறிந்துகொள்ள முடியும்.

இந்த மொபைல் ஆப்ஸ்களை அறிமுகம் செய்த பின்னர் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: மொபைல் ஆப்ஸ்கள் மட்டுமல்லாமல் இ-பாடஷாலா என்ற இணையதளத்தையும் அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பாடங்களை ஆன்-லைனலி் பெற முடியும். மேலும் குழந்தைகள் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்கிறார்களா என்பதையும் கண்காணிக்க முடியும்.

கல்வித் திட்டத்தை மேலும் வெளிப்படையான முறையில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது. அதற்கான திட்டங்கள்தான் இது.

மேலும் மாணவர்கள் எளிதில் கல்வி கற்பதற்கும் இது உதவும் என்றார் அவர்.

English summary
Going a step ahead of Digital India Campaign, the Human Resource Development (HRD) ministry has launched a number of mobile apps and web-based platforms for students. These mobile applications help students to get the study material online. Besides, it will also help parents to keep a track of the performance and attendance of their children

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia