சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இலவச வை-ஃபை வசதியை அளிப்பது தொடர்பாக மத்திய மனிதவள அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
மொத்தம் 38 பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற வசதியை ஏற்படுத்த மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 2ஜிபிபிஎஸ் வேகமுள்ள இலவச வை-ஃபை வசதி மாணவர்களுக்கு செய்து தரப்படும்.

இந்தத் திட்டம் கடந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் விரைவில் அமலாகவுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 38 பல்கலைக்கழங்களில் வரும் 2016 மார்ச் மாதத்துக்குள் இந்த வசதி ஏற்படுத்தப்படும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது.
வை-ஃபை வசதிக்காக தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மாணவர்கள், பேராசிரியர்கள் வசதிக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது. பல்கலைக்கழக வளாகம், மாணவர்கள் விடுதி, சாப்பிடும் அறைகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
இத்தகவலை மனித வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

