புதிய கல்விக் கொள்கைக்கு ஐடியா சொல்லுங்க... வரவேற்கிறது மத்திய அரசு!

Posted By:

சென்னை: மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு யோசனைகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கைக்கு ஐடியா சொல்லுங்க... வரவேற்கிறது மத்திய அரசு!

விரைவில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதற்காக பலதரப்பட்டவரின் யோசனைகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. பள்ளி ஆசிரியர்கள், சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த யோசனைகளைத் தெரிவிக்கலாம்.

புதிய கல்விக் கொள்கையை வரைவு செய்வதில் சிபிஎஸ்இ முக்கிய பங்காற்றவேண்டும் என நான் விரும்புகிறேன்.

இந்த யோசனைகளை வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே உள்ள பிரச்னைகளைக் களைதல், கல்வி புகட்டுவதில் புதிய திட்டங்களை மாணவர்கள் எடுத்துச் சொல்லலாம். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைபெறும் என்றார் அவர்.

English summary
HRD minister Smriti Irani recently invited suggestions from teachers and students of CBSE schools on the new national education policy, which is likely to be prepared by the year end. Speaking In a function the minister said," "CBSE should also be involved in drafting the new national education policy and should ask the students and teachers about their views. The inputs regarding the policy should be collected by November 15.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia