யூடியூப்ள இனிமேல் இதயும் பார்க்கலாம் - டிரென்டாகும் யூடியூப் டியூசன்..!

நகரம் முதல் கிராமங்கள் வரை கையில் ஆன்ரைடு போன் இல்லாத இளசுகள் இல்லை. தற்போது அவர்கள் அனைவரிடத்திலும் வெகுவேகமாக பரவிவரும் கல்விமுறையாக தமிழக அரசின் யூடியூப் தளம் உள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறையில் மாபெரும் புரட்சியாக தற்போது வரவேற்பினைப் பெற்றுள்ளது யூடியூப் டியூசன் முறை. வளர்ச்சியடைந்த நகரங்கள் முதல் பின்தங்கியுள்ள கிராமங்கள் வரை கையில் ஆன்ரைடு போன் இல்லாத இளசுகள் இல்லை.

யூடியூப்ள இனிமேல் இதயும் பார்க்கலாம் - டிரென்டாகும் யூடியூப் டியூசன்..!

தற்போது அவர்கள் அனைவரிடத்திலும் வெகுவேகமாக பரவிவரும் கல்விமுறையாகத் தமிழக அரசின் யூடியூப் தளம் உள்ளது.

டிஎன் எஸ்சிஇஆர்டி

டிஎன் எஸ்சிஇஆர்டி


மாணவர்கள் மத்தியில் நிலவிவரும் கற்றல் குறைபாடுகளைப் போக்கும் விதமாகவும், கடினமான பாடங்களையும் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கும் விதமாகவும் தமிழக பள்ளிக் கல்வி துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு "TN SCERT" என்னும் யூடியூப் தளத்தை துவங்கியது. இதில் பல்வேறு வகுப்பு பாடங்களும் இடம் பெற்றுள்ளது. வகுப்புகளுக்கு ஏற்ப பாடப் பிரிவுகளுக்கும், அதற்கான விளக்கமும் இப்பக்கத்திலேயே உள்ளது. அதிலும் குறிப்பாக மாணவர்களின் மொழி வசதிக்கு ஏற்ப தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்தக் காணொலிகள் உள்ளது இதன் வெற்றிக்கு ஓர் முக்கியப் பங்காகும்.

எந்த நேரமும் உங்கள் கையில்

எந்த நேரமும் உங்கள் கையில்


இந்த யூடியூப் டியூசன் சேனலானது மாணவர்களுக்கு அனைத்து நேரத்திலும் தனது சேவையினை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக விளக்கங்களுடனும் இதில் பாடம் கற்பிக்கப்படுகிறது.

தேசியளவிலான தேர்வு

தேசியளவிலான தேர்வு


நீட், ஜேஇஇ, டிஎன்பிஎஸ்சி போன்ற பல தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்தே 50 சதவிகிதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவ்வாறு இத்தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொண்டிருப்பவர்களுக்கு எளிமையாக TN SCERT யூடியூப் தளத்தில் கேள்வி- பதில்களும் உள்ளன. இந்த நவீன தொழில் நுட்பத்தினைக் கொண்டு மாணவர்களுக்கு எளிமையான விளக்கத்துடன் கல்வி மேற்கொள்ளலாம்.

கூடுதல் செலவும் மிச்சம்

கூடுதல் செலவும் மிச்சம்


பெரும்பாலான மாணவர்களுக்கு டியூசன் செல்வதே ஓர் சிரமமான செயலாக இருக்கும். பலர் கட்டாயத்தின் அடிப்படையிலேயே சென்று வருவர். ஆனால், மொபைல் போன் பயன்படுத்துவது தற்போது வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப காலகட்டத்தில் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அப்படியிருக்க மொபைல் போனிலேயே மாணவர்கள் பாடம் கற்க இத்திட்டம் ஓர் எளிய வழியாக இருக்கும். மேலும், டியூசனுக்கு என தனியாக ஒதுக்கப்படும் செலவும் தவிர்க்கப்படும்.

வரவேற்கும் பெற்றோர்கள்

வரவேற்கும் பெற்றோர்கள்


தமிழகத்தைப் பொறுத்தவரையில் சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே ஆயிரக்கணக்கான ரூபாய் டியூசனுக்கு என செலவழிக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் ஓர் பாடத்திற்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் நீள்கின்றது. ஆனால், தற்போது தமிழக அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த யூடியூப் சேனலின் மூலம் இதுபோன்ற பெரிய தொகை மிச்சமாகிறது எனவும், மேலும், தேவைக்கு ஏற்ற நேரத்தில் உடனுக்குடன் இந்தச் சேனலில் சந்தேகங்கள் தீர்க்கப்படுகிறது என்றும் பெற்றோர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
How to study and understand easily in TN SCERT
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X