வங்கித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?- பகுதி 1

Posted By:

சென்னை: வங்கித் தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி என்பது குறித்து சில டிப்ஸ்களைத் தருகிறோம்..

நடப்பு ஆண்டுகளில் வங்கித் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைக்குச் செல்வது ஒரு சிலர் மட்டுமே. இந்த நிலையில் வங்கித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து சில விளக்கங்களைத் தருகிறோம்.

வங்கித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?- பகுதி 1

வங்கித் தேர்வுகளில் பெரும்பாலும் கலவையான மற்றும் வரிசைமாற்றம் தொடர்பான கேள்விகள் அதிகம் வருகின்றன. ஆனால் அந்தக் கேள்விகளை எளிதில் தீர்த்துவிடலாம். இந்தத் தீர்வுகளைக் காண ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரமே ஆகும். அதில் என்னவென்றால் அந்தக் கருத்தை மட்டும் நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டால் எளிதில் பிரச்னைகளைத் தீர்க்கலாம்.

கலவை தொடர்பான கேள்விகளுக்கு பொருட்களை கலவையான ஆர்டரில் தேர்வு செய்யவேண்டும். வரிசைமாற்றக் கேள்விகளுக்கு பொருட்களை சரியான ஆர்டரில் தேர்வு செய்யவேண்டும்.

வரிசைமாற்றம்: வரிசைமாற்றம் தொடர்பான கேள்விகள் குறித்து ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். இப்போது ஒரு நீச்சல் போட்டி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் 8 பேர் பங்கேற்கன்றனர். ஏ, பி, சி. டி, இ, எஃப், ஜி, எச் என 8 பேர் பங்கேற்கின்றனர். தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்கள் மட்டுமே தரப்படவேண்டும்.

இந்த 3 பதக்கங்களை எப்படி 8 பேருக்குத் தரமுடியும்?

இதற்கு வரிசைமாற்றம் ஃபார்முலாவைப் பயன்படுத்தலாம். அதைப் பயன்படுத்த பதக்கங்களை வழங்கலாம்

தங்கப் பதக்கம் தருவதற்கு நம்மிடையே உள்ளது: 8 வாய்ப்புகள் ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச். இதில் ஏ தங்கம் வென்றதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது வெள்ளிப் பதக்கம். நம்மிடையே உள்ளது 7 வாய்ப்புகள்(ஏற்கெனவே ஏ தங்கப் பதக்கம் வென்றுவிட்டதால்): பி, சி, டி, இ, எஃப், ஜி, எச். இப்போது பி வெள்ளிப் பதக்கம் வென்றதாக வைத்துக்கொள்வோம்.

இப்போது ஏ, பி ஆகியோர் தங்கம், வெள்ளியை வென்றுவிட்டனர். நம்மிடையே உள்ளது 6 வாய்ப்புகள், இவற்றில் ஒருவருக்கு வெண்கலம் தரவேண்டும்: சி, டி, இ, எஃப், ஜி, எச் ஆகிய 6 வாய்ப்புகள். இதில் சி வெண்கலம் வென்றதாக வைத்துக்கொள்வோம்.

முதலில் நம்மிடம் 8 வாய்ப்புகள் இருந்தது. பின்னர் அது 7 ஆனது. அதைத் தொடர்ந்து 6 ஆனது. நம்மிடம் இருந்த வாய்ப்புகள் 8 * 7 * 6 = 336. இந்த நிலையில் 8 பேரில் 3 பேருக்கு பதக்கம் தந்துவிட்டோம். இதையடுத்து வாய்ப்புகள் 8, 7, 6 ஆனது. இப்போது பதக்கம் இல்லாவிட்டதால் மொத்தம் 5 வாய்ப்புகள் மட்டும் உள்ளன.

நமக்குத் தேவை 8 x 7 x 6 என்பதற்கான விடை மட்டுமே. எனவே 5 x 4 x 3 x 2 x 1 இதை நாம் நீக்கவேண்டும். எனவே நமக்குக் கிடைப்பது 5. எனவே நமக்கு 8!/5! கிடைத்தால் நமக்கு கிடைக்கும் விடை 5. 5 பேருக்கு பதக்கம் இல்லை. 3 பேருக்கு பதக்கம் கிடைத்தது. எப்படி 8 (8-3). 8-ல் முதல் மூன்றைப் பயன்படுத்துவோம்.

இதுதான் வரிசைப்படுத்தும் பார்முலா. இப்படித்தான் நாம் இந்த கணக்குப் புதிர்களைத் தீர்க்கவேண்டும். இதுபோன்ற ஆலோசனைகளை நமக்கு பெங்களூருவைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் வைபவ் மேத்தா வழங்கி வருகிறார்.

English summary
How to Prepare Permutation & Combination for Banking Exams - Part 1 If there is one topic in competitive exams, which almost everyone struggles with, it is Permutation & Combination. Almost all the papers have 2-4 questions from this topic and almost everyone leaves these questions. However, these are very easy and take less than a minute to solve. Only thing you need to do is understand the concept.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia