போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி,,,?

Posted By:

சென்னை : மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரு அரசுகளுமே போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளில் சேர்க்கப்படுகின்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசால் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. போட்டித் தேர்வில் முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு , நேர்க்காணல் என மாணவர்கள் பல்வேறு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே வேலையில் அமர்த்தப்படுகிறார்கள்.

பல்வேறு போட்டித் தேர்வுகள் மத்திய மற்றும் மாநில அரசால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசு வேலை வாய்ப்பினை பெறுகின்றனர்.

மத்திய அரசு போட்டித் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசு நடத்துகிறது. மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் மூன்று கட்டத் தேர்வாகவே நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் நடத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் மெயின் தேர்வினை எழுத தகுதி பெறுவார்கள். பின்பு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்க்காணல் நடத்தப்படும். அதற்குப் பின்புதான் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மாநில அரசு போட்டித் தேர்வு

மாநில அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளில் குரூப் 1 தேர்வு மற்றும் குரூப் 2 தேர்வுகளில் மட்டும் மூன்றுக் கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். குரூப் 2ஏ தேர்வு, (நேர்க்காணல் இல்லாத தேர்வு) குரூப் 4 தேர்வு ஆகியவற்றிற்கு ஒரு கட்டத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

அடிப்படைக் கல்வி

போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது சிறந்த பயிற்சியினை மேற்கொண்டால்தான் போட்டித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெற முடியும். அடிப்படைக் கல்வியை புரிந்து படித்த மாணவர்களால் போட்டித் தேர்வுல் எளிதாக தேர்ச்சி பெற முடியும். போட்டித் தேர்வில் பங்கு பெற விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அனுதினமும் செய்தித்தாள் வாசிப்பது, நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

புரிந்து படித்தல்

பொது அறிவு வினா விடைகளை அதிகமாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிப் படிப்பில் ஆர்வமாகவும் புரிந்து கொண்டும் படித்த மாணவர்களால் போட்டித் தேர்வை அணுகுவது எளிது. தேர்வுக்குறித்த பாடங்களை நன்றாகப் படிக்க வேண்டும். தேர்வு சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கி புரிந்து படிக்க வேண்டும்.

மாதிரி வினாத்தாள்

மேலும் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் சுய முயற்சியால் படிக்கும் மாணவர்கள் கடந்த பத்து ஆண்டுக்கான மாதிரி வினாத்தாள்களை சேகரித்து படிப்பது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதில் எப்படியெல்லாம் கேள்விள் கேட்கப்பட்டிருக்கிறது என ஒரு தெளிவு கிடைக்கும். மேலும் போட்டித் தேர்வு எழுத விரும்புபவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் எப்போதுமே ஆர்வம் காட்ட வேண்டும்.

பெற்றோர்களின் பங்கு

மேலும் இன்றைய சமுதாயத்தில் சிறுவயதில் இருந்தே நான் கலெக்டராக வேண்டும். டாக்டர் ஆக வேண்டும் என குழந்தைகள் கூறுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பத்தை புரிந்து கொண்டு சிறுவயதில் இருந்தே அவர்களை தயார்ப்படுத்த வேண்டும். செய்தித்தாள் வாசிப்பது போன்ற நல்ல பழக்கங்களை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பொது அறிவுக் குறித்த விஷயங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டு அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அவர்களுக்குள் வளர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் வருங்கால சந்ததியினருக்கு போட்டித் தேர்வு என்பது எளிதாகி விடும்.

English summary
In this competitive world, being well prepared is the key to success. In today’s world no matter which field we belong to, we are required to appear for competitive exams for civil services or for any other position in central and state government.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia