காமட்-கே நுழைவுத் தேர்விற்கு தயாராவது எப்படி.. குட்டி குட்டி டிப்ஸ்கள்!

Posted By:

பெங்களூர்: காமட்-கே தேர்வு என்பது கர்நாடகாவிலுள்ள தனியார் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும். இந்தத் தேர்வு கர்நாடக மருத்துவக் கூட்டமைப்பு மூலமாக கர்நாடகா மாநிலத்தில் நடத்தப்படுகிறது.

மருத்துவம், பிடிஎஸ், மருத்துவத் துறையைச் சார்ந்த மற்றப் படிப்புகள் மற்றும் பொறியியல் துறையைச் சார்ந்த அனைத்து வகையான கோர்ஸ்களிலும் சேர்ந்து படிப்பதற்காக இந்தத் தேர்வு தேசிய அளவில் கர்நாடகா மாநில அரசால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மாணவர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கக் கூடிய தேர்வாகும். இது மாணவர்களிடையே அதிகப் போட்டியை ஏற்படுத்தும் தேர்வாகவும் அமைகிறது.

காமட்-கே நுழைவுத் தேர்விற்கு தயாராவது எப்படி.. குட்டி குட்டி டிப்ஸ்கள்!

காமட்-கே இளம்நிலை நுழைவுத் தேர்விற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் முதலிலேயே திட்டமிடுவது அவசியமாகும். தேர்வைக் குறித்து பயம் மற்றும் அழுத்தம் இல்லாமல் இருப்பதே வெற்றி பெறுவதற்கு முதல் காரணமாக அமையும். காமட்-கே நுழைவுத் தேர்வில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது 2nd பியூசியில் உள்ள பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும்.

நீங்கள் காமட்-கே நுழைவுத் தேர்விற்கு திட்டமிடுவதற்காக சில எளிய குறிப்புகள் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

1 நீங்கள் காமட்.கே நுழைவுத் தேர்விற்கு படிப்பதற்காக முதலில் ஒரு அட்டவணையைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்த அட்டவணையில் அனைத்துப் பாடங்களின் தலைப்புகளையும் குறித்துக் கொள்ளுங்கள். எந்தப் பாடத்தை எந்த நேரம் எந்த நாள் படிக்க வேண்டும் என்பதை முதலில் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதன் படி படியுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும் போது அது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

2 மேலும் உங்களுக்கு எந்நப் பாடம் கடினமாக இருக்கிறதோ அந்தப் பாடத்திற்கு சற்று அதிக நேரம் ஒதுக்குங்கள். அதிக கவனத்துடனும் படியுங்கள். மற்றும் வேதியியலுள்ள குறியீடுகள் கணிதத்திலுள்ள சூத்திரங்கள் போன்றவற்றை எழுதிப் பார்த்து படியுங்கள்.

3 நீங்கள் படிக்கும் பாடங்களிலுள்ள முக்கிய குறிப்புளை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு தேர்விற்கு முந்தைய நாள் திருப்பிப் பார்ப்பதற்கு உபயோகமாக இருக்கும். படித்துக் கொண்டிருக்கும் போது சற்று சலிப்பு ஏற்பட்டால் அந்ந நேரங்களில் உயிரியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் வரும் படங்களை வரைந்து பாருங்கள். நீங்கள் ஏதேனும் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்துப் படிக்கும் போது அங்கு உங்களுக்கு தேர்வை எப்படி கையாளுவது மற்றும் தேர்வில் என்னென்ன கேள்விகள் எப்படிக் கேட்கப்படும் அதற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று கற்றுத் தருவார்கள். எளிய முறையில் விரைவாக பதிலளிப்பதற்குத் தேவையான வழி முறைகளையும் கற்றுத் தருவார்கள்.

4 முந்தைய வருட வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை அடிக்கடி எழுதிப் பாருங்கள் அது உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். அதன் மூலம் என்னென்ன தெரிந்து இருக்கிறது எந்த கேள்விகள் எல்லாம் தெரியவில்லை என்பது உங்களுக்கு விளங்கிவிடும். பின்பு நீங்கள் அதற்கேற்றாற் போல் படிக்கலாம்.

5 நுழைவுத் தேர்வுக்கு முன்னதாக 3 அல்லது 4 மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஒரு உந்துதலாக அமையும்.

6 ஒரே புத்தகத்திலுள்ள பாடங்கள் மட்டும் தேர்விற்கு வராது ஒன்றுக்கும் மேற்பட்டப் புத்தகளில் இருந்து வினாக்களை எடுத்து வினாத்தாள்களை தயார் செய்வார்கள். எனவே மாணவர்கள் முடிந்த வரை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களைப் பயன்படுத்தி நுழைவுத் தேர்விற்கு தயாராகுங்கள்.

7 காமட்-கே நுழைவுத் தேர்விற்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்களை வைத்துப் படிக்கும் போது எந்தெந்த தலைப்புகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. எந்தெந்தத கேள்விகள் எளிதாக உள்ளது எது கடினமாக உள்ளது என ஆராய்ந்து அறியமுடியும். அது இன்னும் நீங்கள் திறமையாகப் படிக்க உதவியாக இருக்கும்.

8 நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு விரைவாக எழுதுவதும் மிக முக்கியமாகும். முந்தைய வினாத்தாள்களை எழுதிப் பார்ப்பது உங்களுடைய வேகத்தை அதிகரிக்கும். நீங்கள் தேர்வு எழுதும் போது முழுக் கவனத்துடன் எழுதுங்கள். கவனமுடன் எழுதும் போதுதான் அதிக மார்க் ஸ்கோர் பண்ண முடியும். தேர்வு ஆரம்பிப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னதாகவே புதிதாக பாடங்கள் படிப்பதை நிறுத்தி விடுங்கள். படித்த பாடங்களை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக ரிவிசன் விடுங்கள் அது உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

பயிற்சியும் முயற்சியும் உங்களிடம் உள்ள வரை உங்களை யாராலும் அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது!

English summary
we are providing few simple tips that help to plan your studies and get the high scores in comedk-uget examination.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia