ஐஏஎஸ் தேர்வில் 2-வது ரேங்க் பிடித்தது எப்படி...! காஷ்மீர் மாணவர் ஆமீர் சொல்கிறார்....!!

காஷ்மீர்: விடாமுயற்சியின் காரணமாக ஐஏஎஸ் தேர்வில் 2-வது ரேங்க் பிடிக்க முடிந்தது என்று அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற ஜம்மு-காஷ்மீர் மாணவர் அத்தர் ஆமீர் உல் ஷபி கான் கூறினார்.

நேற்று வெளியான குடிமைப் பணிகள் தேர்வில் அத்தர் ஆமீர் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஐஏஎஸ் தேர்வில் 2-வது ரேங்க் பிடித்தது எப்படி...! காஷ்மீர் மாணவர் ஆமீர் சொல்கிறார்....!!

 

தற்போது இந்தியன் ரயில்வே டிராபிக் சர்வீஸ் பணியில் இருக்கிறார் ஆமீர்.

வெற்றி குறித்து அத்தர் ஆமீர் கூறியதாவது....

எனக்கு 23 வயதாகிறது. தொடக்கத்திலிருந்தேன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். அது இப்போது நனவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் எனது ரேங்க் மிகவும் பின்தங்கியிருந்தது. இதையடுத்து நான் இந்தியன் ரயில்வே டிராபிக் சர்வீஸில் பணியமர்த்தப்பட்டேன்.

ஆனாலும் என்னுடைய கனவான ஐஏஎஸ் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் வருவது என்ற ஆசையை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தேன். அந்த விடாமுயற்சிக்குத்தான் இப்போது வெற்றி கிட்டிடயுள்ளது.

ஐஏஎஸ் தான் என்னுடைய முதல் இலக்கு, கனவு, திட்டம், லட்சியம் எல்லாம். இதற்காக பயிற்சி பெற்றேன்.

அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள தேவிபோரா-மட்டன் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். எனது தந்தை பளளி ஆசிரியர்.

பயிற்சியின்போது மிகவும் ஆர்வமாக இருந்தேன். என்னுடைய பள்ளிப் படிப்பை டைன்டேல் பிஸ்கோ பள்ளியில் முடித்தேன். ஐஐடி-யில் எனக்கு இடம் கிடைத்தது. ஆனால் சேரவில்லை.

ஐஏஎஸ்-ஸில் வெற்றி பெறாமல் வருவதில்லை என்ற முடிவில் இருந்தேன். அதில் சாதித்தும்விட்டேன்.

என்னுடைய மாநில மக்களின் வளர்ச்சிக்காக என்னாலான திட்டங்களைக் கொண்டு வருவேன் என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Athar Aamir-ul-Shafi Khan, a young man from Kashmir, has finally achieved what he dreamt of. The 23-year-old has made it to the prestigious Indian Administrative Service (IAS) securing second rank in the country; he was offered an allied service because of a lower rank in his first attempt last year."I had appeared last year but my ranking was down and, therefore, I was offered Indian Railway Traffic Service (IRTS). I joined but IAS was my first love and I planned to do both - join the training and appear again."Khan belongs to Devipora-Mattan village in Anantnag district, 60 km south of Srinagar. The son of a school teacher, he became interested in joining IAS after Shah Faesal from the Kashmir valley topped civil services examination in 2009.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more