இயற்பியலில் அதிகம் மார்க் வேணுமா...?

Posted By:

சென்னை : மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி மேற்படிப்புகளுக்கு அவசியமான பாடங்களில் ஒன்று இயற்பியல் ஆகும். இயற்பியல் முக்கியப் பாடங்களில் ஒன்று என்பதால் இதில் அதிகம் மார்க் எடுக்க வேண்டியது அவசியமும் கூட. சரியான திட்டமிடுதலும் முயற்சியும் இருந்தால் கட்டாயம் முழு மதிப்பெண்களைப் பெற முடியும். இயற்பியல் ஒன்னும் அவ்வளவு கஷ்டமான பாடம் இல்லை. புரிந்து படித்தால் கட்டாயம் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.உங்கள் ஆர்வம் உங்கள் மதிப்பெண்னை முடிவு பண்ணும். நீங்கள் எவ்வளவு ஆர்வமாகப் படிக்கிறீர்களோ அந்த அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும்.

இயற்பியலில் அதிகம் மார்க் வேணுமா...?

1. இயற்பியல் தேர்வுக்குப் படிக்கும் போது புரிந்து படிக்க வேண்டும். இயற்பியல் பாடங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்வுடையதாக இருக்கும். எனவே பாடங்களைப் படிக்கும் போது புரிந்தும் தெளிவாகவும் படிக்க வேண்டும்.

2. இயற்பியல் பாடங்களைப் படிக்கும் போது கவனமாகவும் விரும்பியும் படிக்க வேண்டும். ஒரு பாடத்தில் நமக்கு எப்பொழுது ஆர்வம் குறையும் என்றால் அது புரியாமல் போகும் போதுதான். அதனால் மாணவர்கள் பள்ளியில் பாடம் நடத்தும் போதே நன்றாக கவனித்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு உடனே தெளிவுப் பெற்று விட வேண்டும்.

3. இயற்பியல் பாடங்களைப் படிக்கும் போது புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியேப் படித்து எழுதிப் பார்க்க வேண்டும். சொந்தகமாகப் படித்து எழுதும் போது கருத்து மற்றும் அர்த்தம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. மாதிரி வினாத்தாள்களில் உள்ள வினாக்களை நன்கு படித்து எழுதிப் பார்க்க வேண்டும். எழுதிப் பார்க்கும் போது நேரம் மேலாண்மையை கட்டாயம் பின் பற்ற வேண்டும். சூத்திரங்கள், சமன்பாடுகள் ஆகியவற்றை புரிந்து படிக்க வேண்டும். இயற்பியல் உள்ள இயல்பான விஷயங்களை விளங்கிப் படிக்கும் போது. வெற்றி எளிதாகும்.

5. பாடங்களை நாம் புரிந்து படிக்கும் போது ஆர்வம் தானாக வந்து விடும். ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பாடங்களை விளையாட்டாக எடுத்துப் படிக்க வேண்டும். அனைத்து தலைப்பில் உள்ள பாடங்களையும் வாசித்து குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும் குறிப்புகள் இறுதித் தேர்வின் போது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

6. ஒவ்வொரு பாடத்தையும் படிக்கும் போது அதனுடன் தொடர்புடைய விஷயங்களை இணைத்துப் படிக்க வேண்டும். அப்படி படிக்கும் போது உங்களுக்கு மறக்காது. பாடல் பாட உங்களுக்கு பிடிக்கும் என்றால் பாடலாக உருமாற்றி பாடங்களை படியுங்கள். உங்கள் ஆர்வத்தை தட்டி எழுப்பும் வகையில் உங்கள் விருப்பம் போல் பாடங்களை அர்த்தம் மாறாமல் படியுங்கள்.

7. ஒவ்வொரு அத்தியாயங்களிலும் உள்ள விதிகளைப் பற்றி சிறு குறிப்பு எடுங்கள் அது உங்களுக்கு மொத்த விதிகளையும் ஒரு சேரப் படிக்க உதவும். அதில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை புரிந்து படிக்கும் போது எளிதாக இருக்கும்.

8. சர்க்யூட் விளக்கப்படங்கள், ரே விளக்கப்படங்கள் மற்றும் சாதனங்கள் விளக்கப் படங்களை தெளிவாகப் படித்து மீண்டும் மீண்டும் வரைந்தும் எழுதியும் பார்க்க வேண்டும். இவைகளை சரியாக எழுதும் போது முழு மதிப்பெண்கள் கட்டாயம் கிடைக்கும்.

9. இயற்பியலில் வரும் அலகுகள் பற்றி தெளிவாகப் படித்துக் கொள்ள வேண்டும். சூத்திரங்களையும் நன்றாக எழுதிப் பார்க்க வேண்டும். சிறு சிறு பிழைகள் கூட அதிக மார்க்குகளை இழக்க வைத்து விடும். எனவே இயற்பியலைப் பொறுத்த வரையில் அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படித்து விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.

10. தேர்வின் போது ஒரு முறைக்கு இரு முறை நன்றாக கேள்வியை வாசித்து விட்டு பின்பு சரியான பதிலை அளிக்க வேண்டும். நேரம் மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

English summary
Eng summary : Above mentioned tips very useful to get maximum marks in physics for all the students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia