ஜெஇஇ தேர்விற்கான 10 பயனுள்ள எளியக் குறிப்புகள்!

ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.

புது டெல்லி : ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள எஞ்னியரிங் படிப்பில் சேருவதற்காக இந்தத ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது. இது ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

நேரம் மேலாண்மை :

மாணவர்களே நேரம் மேலாண்மை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வெரு பாடங்களுக்கும் தனித்தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். மேலும் கணிதப் பாடத்தில் கணக்கீட்டினை நீங்கள் மேற்கொள்ளும் போது கால்கலேட்டர் உபயோகிப்பதை தவிர்க்கவும். தேர்வில் நீங்கள் விரைவாக கணக்கீட்டினை செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் கணிதத்தில் தேவையில்லாத ஸ்டெப்புகளை நீங்கள் தவிர்ககும் போது அது உங்கள் நேரத்தினை மிச்சப்படுத்தும்.

ஜெஇஇ தேர்விற்கான 10 பயனுள்ள எளியக் குறிப்புகள்!

எளிய கேள்விகளை முதலில் தீர்க்க :

முதலில் நீங்கள் எளிய கேள்விகளை எழுதுங்கள். பின்னர் கடினமான கேள்விக்குச் செல்லுங்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

பலவீனமான பகுதிகளை ஆராயுங்கள் :

நீங்கள் எந்தப் பாடத்தில் எந்தப் பகுதியில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்று முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். எந்தப் பாடத்தினைப் படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் எதனால் அதிக நேரம் எடுக்கிறது என்பதை அறிந்து செயல்படுங்கள் பெரிய பாடமாக இருந்தால் அதனைப் பகுதி பகுதியாகப் பிரித்து எளிதாக்கி படியுங்கள் எதையுமே கடினமாகப் பார்க்காதீர்கள். இவ்வாறு செய்யும் போது நீங்கள் கட்டாயம் ஜெஇஇ முதல் தாளில் அதிக மதிப்பெண்களை பெறலாம்.

முதலில் தியரி பகுதிகளை எழுதுங்கள் :

முதலில் தியரியாக உள்ள கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள். பின்னர் கால்குலேட்டிவ் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள். முதல் 15 நிமிடங்கள் எந்தத கால்குலேட்டிவ் கேள்விகளுக்கும் பதிலளிக்காதீர்கள். ஏனென்றால் அது தொடக்க நேரம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கும். அப்போது நீங்கள் கால்குலேட் செய்யும் போது தவறுகள் அதிகம் ஏற்படலாம் மற்றும் நேரம் தேவையில்லாமல் விரையம் ஆகலாம் எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.

தரமான கேள்விகளைப் பயிற்சி செய்யுங்கள் :

நீங்கள் தேர்விற்குப் பயிற்சி செய்யும் போது நல்லத் தரமான கேள்விகளைப் பயிற்சி செய்யுங்கள். முக்கியமான கேள்விகள் மற்றும் அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள் ஆகியவற்றை தேர்வு செய்து படியுங்கள். நீங்கள் தரமான நூறு கேள்விகளைப் படித்து முடித்தால் அது ஆயிரம் கேள்விகளுக்குச் சமமானதாகும்.

வெற்றி பெறும் வரை முயற்சி செய்யுங்கள் :

நீங்கள் எடுக்கும் முயற்சி பயனுள்ளதாக இருக்க வேண்டும். பிரச்சனைக்குரியப் பகுதிகளை முதலில் சரிசெய்யுங்கள். மீண்டும் அதேப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களால் எந்த அளவிற்கு முயற்சி செய்ய முடியுமோ அதையும் தாண்டி ஒரு படி அதிகமாக முயற்சி செய்யுங்கள்.

முந்தைய வினாத்தாள்களைப் பயிற்சி செய்தல் :

முந்தைய வினாத்தாள்களை நீங்கள் பயிற்சி செய்துப் பார்க்கும் போது அதில் எந்தப் பகுதி அதிகமாகக் கேட்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்ள முடியும். எவைகளெல்லாம் முக்கியமானவைகள் மீண்டும் மீண்டும் எந்ததப் பகுதியில் அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதனை நன்கு அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நீங்கள் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

ரிவிசனுக்காக நேரம் ஒதுக்குங்கள் :

நீங்கள் எல்லாப் பாடத்தையும் முதலில் படித்து முடித்து விடுங்கள். பின்னர் அதனை தேர்விற்கு முன்னதாக ஓரிரு முறையாவது கட்டாயம் ரிவிசன் விட வேண்டும். அப்போது தான் நீங்கள் படித்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். ரிவிசனின் போது உங்கள் தவறுகளை எல்லாம் சரிசெய்து கொள்ளுங்கள். ரிவிசன் கட்டாயம் விட வேண்டும்.

பார்மட்டை பயிற்சி செய்யுங்கள் :

ஜெஇஇ தேர்விற்கான பார்மட் செகண்டரி போர்டு தேர்வில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். எனவே எம்சிகியூ பார்மட் வினாத்தாள்களை அதிகமாகப் பயிற்சி செய்து பாருங்கள். இது பொருத்தமானதாக இருக்கும். இந்நத் தேர்வில் நெகட்டிவ் மார்க்குகள் இருக்கின்றன. எனவே ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் முன்பு நன்கு யோசித்து பதில் அளியுங்கள்.

யூகங்கள் மற்றும் தேவையில்லாத நடவடிக்கைகளை தவிர்க்கவும் :

நீங்கள் கேள்விக்குப் பதில் அளிக்கும் போது நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளியுங்கள். சீரற்ற யூகங்களின் அடிப்படையில் கேள்விகளுக்குப் பதிலளிக்காதீர்கள். ஏனென்றால் நெகட்டிவ் மார்க் உள்ளது. நன்றாக தெரிந்தத கேள்விகளுக்கு யோசித்து சரியான பதிலை எழுதுங்கள். அது உங்களுக்கு அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.

தகுந்த முயற்சியினை எடுத்த நீங்கள் பயிற்சியினை மேற்கொண்டால் என்ஐடி, ஐஐஐடி மற்றும் ஐஐடி போன்ற உலகத் தரமான நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பு உங்களுக்கும் கட்டாயம் கிடைக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Ministry of Human Resource Development, Government of India and Central Board of Secondary education (CBSE), New Delhi introduced the national level common entrance exam called Joint Entrance Examination (JEE).
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X