ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்குத் தேவையான டிப்ஸ்கள் இதோ!

Posted By:

புது டெல்லி : ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, ஐஐடி கவுகாத்தி, ஐஐடி கான்பூர், ஐஐடி கரக்பூர், ஐஐடி சென்னை, ஐஐடி ரூர்க்கி ஆகியவை கூட்டாக சேர்ந்து ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வினை நடத்துகிறது. இந்தத் தேர்வு தேசிய அளவிலான ஏழு மண்டலங்களிலுள்ள ஐஐடிகளில் சேருவதற்காக நடத்தப்டுகிறது. இந்தத் தேர்வு ஜெஇஇ மெயின் மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் என்று இரண்டுப் பகுதியாக நடத்தப்படுகிறது.

ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுள் முதல் 1,50,000 இடங்களில் வரும் மாணவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத முடியும். இதில் அனைத்து பிரிவினைச் சார்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம். ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐடி பிஹெச்யூ மற்றும் ஐஎஸ்எம் தன்பாத் போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி கற்கலாம்.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்குத் தேவையான டிப்ஸ்கள் இதோ!

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு மாணவர்களுக்கு மிகவும் சவாலான மற்றும் அவர்களிடையே அதிகப் போட்டியை ஏற்படுத்தும் தேர்வாகும். இந்தத் தேர்வில் உளச்சார்பு, காரணமறிதல், திறனறிதல், புரிதல், பகுப்பாய்வு போன்ற தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும். ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு 2017 மே 21ம் தேதி நடைபெறுகிறது.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்கு தயாராவதற்கு தேவையான 10 டிப்ஸ்கள்

1 ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்குப் படிக்கும் போது 12ம் வகுப்பு என்சிஇஆர்டி புத்தகங்களைப் படியுங்கள். மேலும் தினமும் ஒரு மணி நேரமாவது இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் உள்ள நியூமரிக்கல் பிராபலம்ஸ்களை செய்துப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

2 ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் எந்தெந்த தலைப்பில் கேள்விகள் கேட்கப்படும் என்பதனைக் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் நீங்கள் படியுங்கள்.

3 தேர்விற்குத் தயாராவதற்காக சிறப்பு பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கொள்ளுங்கள். அதில் என்னென்னப் படிக்க வேண்டும், எந்த நேரம் எந்தப் பாடம் படிக்க வேண்டும் என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எளிதானப் பாடங்கள் மற்றும் கடினமானப் பாடங்கள் எனப் பிரித்து வரையறுத்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப படியுங்கள். கடினமாப் பாடத்திற்கு சற்று அதிக நேரம் ஒதுக்கிப் படியுங்கள்.

4 ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்கான கோச்சிங் கிளாஸ்ஸிற்குச் செல்லுங்கள். அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அங்கு நீங்கள் எப்படி படிக்க வேண்டும். எந்தெந்தப் புத்தகங்களைப் பயன்படுத்திப் படிக்க வேண்டும் என கற்றுத் தருவார்கள். மேலும் நேரம் மேலாண்மை மற்றும் சார்ட் கட் மெத்தடுகள் உங்களுக் கற்றுக் கொடுக்கப்படும்.

5 சூத்திரங்கள் மற்றும் தியரி பேப்பர்களைப் படிக்கும் போது எழுதிப் பார்த்து படியுங்கள். அது உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் எல்லாவற்றையும் எழுதிப் படிக்க முடியாவிட்டாலும் ஒரு சில முக்கிய குறிப்புகளையாவது எழுதிப் பாருங்கள்.

6 தினமும் நீங்கள் படிக்க வேண்டும் என நினைத்தவற்றைக் கட்டாயம் படுக்கைக்கு போகும் முன்பாகப் படித்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

7 ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்குத் தயாராகும் முன்பு அதற்கான பாடத்திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டுப் படியுங்கள். நீங்கள் ஒரு புத்தகத்தை மட்டும் அடிப்படையாக வைத்துப் படிக்காமல் பாடத்திட்டம் சம்பந்தப் பட்ட வேறு புத்தகங்களையும் வைத்துப் படியுங்கள்.

8 நேரம் மேலாண்மை என்பது பொதுவாக எல்லாத் தேர்விலும் முக்கியமாகக் கருதப்படுகிறது. நீங்கள் நன்றாகப் படித்து விட்டு தேர்விற்குச் செல்லும் போது அங்கு அனைத்துமே உங்களுக்குத் தெரிந்த கேள்வியாக இருக்கின்ற பட்சத்தில் நீங்கள் அனைத்தையும் எழுதுவதற்கு நேரம் மேலாண்மை மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே அடிக்கடித் தேர்விற்கு முன்பு மாதிரி தேர்வினை எழுதிப் பாருங்கள்.

9 முந்தைய வருட மாதிரி வினாத்தாள்களைக் கட்டாயம் எழுதிப் பாருங்கள். அதிலிருந்து எவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன மேலும் எந்தப் பகுதியில் அதிகமான கேள்விகள் கேட்கப்படுகிறது என்பது போன்ற தகவல்கள் கிடைக்கும்.

10 மாதிரி வினாத்தாள்களை நீங்கள் தொடர்ந்து செய்துப் பார்க்கும் போது அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது தேர்வினை நீங்கள் பயமில்லாமல் அணுகுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் உங்களின் நேரம் மேலாண்மைத் தன்மையையும் அது அதிகரிக்கும். குறைந்தது 10 அல்லது 15 மாதிரி வினாத்தாள்களை நீங்கள் தேர்விற்கு முன் எழுதிப் பார்ப்பது நல்லது. அதனால் நீங்கள் திறமையாகத் தேர்வு எழுதலாம்.

English summary
Eng summary : JEE Advanced is an engineering entrance exam conducted by IITs for admissions into under graduate engineering courses. JEE Advanced will be jointly conducted by IIT Bombay, IIT Delhi, IIT Guwahati, IIT Kanpur, IIT Kharagpur, IIT Madras and IIT Roorkee.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia