ஐஐடி மாணவர்கள் 14 பேருக்கு விருது வழங்கி கௌரவித்தது ஹோண்டா!!

Posted By:

சென்னை: ஐஐடி மாணவர்கள் 14 பேருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஹோண்டா மோட்டார் இந்தியா நிறுவனம்(எச்எம்ஐ).

இவர்கள் அனைவரும் இந்திாயவின் பல்வேறு ஐஐடி-களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி மாணவர்கள் 14 பேருக்கு விருது வழங்கி கௌரவித்தது ஹோண்டா!!

இதுகுறித்து எச்எம்ஐ இந்தியா நிறுவன இயக்குநர் கீட்டா முரமட்சு கூறியதாவது:

மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை மேலும் வெற்றி பெறச் செய்வதுதான் எங்களது நிறுவனத்தின் நோக்கம். அதற்காகவே இந்த யெஸ் எனப்படும் விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு இந்த விருது 14 ஐஐடி மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.

ஐஐடி மாணவர்கள் 14 பேருக்கு விருது வழங்கி கௌரவித்தது ஹோண்டா!!

இந்த விருதை 2008-ம் ஆண்டு ஹோண்டா பௌண்டேஷன் தொடங்கியது. இந்த விருதானது 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.80 லட்சம்) பரிசுத்தொகை கொண்டதாகும்.

ஐஐடி மாணவர்கள் 14 பேருக்கு விருது வழங்கி கௌரவித்தது ஹோண்டா!!

தேர்வு செய்யப்பட்ட 14 பேரும் டெல்லி, பம்பாய், ரூர்க்கி, மெட்ராஸ், காரக்பூர், கான்பூர், கௌஹாத்தி ஐஐடி, பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களாவர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது என்றார் அவர்.

English summary
Leading automobile major Honda Motor India Pvt (HMI) on Thursday conferred the ninth Young Engineers and Scientists (Y-E-S) award on 14 Indian students from the premier IITs."It has been our endeavour to promote and encourage young students to involve in higher research in the field of technology. We want to provide them the opportunity with Y-E-S awards so that they can fullfill their dreams," said HMI India director Keita Muramatsu in a statement.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia