எச்எம்டி மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள எச்எம்டி மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

எச்எம்டி நிறுவனத்தில் மத்திய அரசின் கனரக மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாகும். டிராக்டர்கள், கைக்கடிகாரங்கள், தொழிற்சாலைக்குத் தேவையான கருவிகளைத் தயாரித்து வருகிறது இந்த நிறுவனம்.

எச்எம்டி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் பெங்களூரு, பிஞ்சோர், களமசேரி, ஹைதராபாத், அஜ்மீர் நகரங்களில் அமைந்துள்ளன.

எச்எம்டி மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு

இந்த நிலையில் பெங்களூரிலுள்ள தொழிற்சாலையில் எக்சிகியூட்டிவ் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பிரவில் சேர மெக்கானிக்கல், இண்டஸ்டிரியல் என்ஜினியரிங், புரொடக்ஷன் பிரிவில் பி.இ. முடித்திருக்கவேண்டும். மேலும் பணியனுபவமும் இருக்கவேண்டும்.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் டிசம்பர் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை HMT Machine Tools Limited, HMT Bhavan, #59, Bellary Road, Bangalore -32 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.hmtindia.com என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia