இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Posted By:

சென்னை : இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தயாரிப்பு, பழுதுப்பார்த்தல் உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
பல இடங்களில் கிளை மையங்களையும் கொண்டு செயல்படுகிறது.

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

உத்திரப் பிரதேசம் லக்னோ கிளையில் ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 173 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 89 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 46 இடங்களும், எஸ்சி. பிரிவினருக்கு 36 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 2 இடங்களும் உள்ளன.

மெஷினிஸ்ட், டர்னர், கிரைண்டர், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக் போன்ற பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிட்டர் பிரிவுக்கு மட்டும் 95 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

ஐ.டி.ஐ முழுநேர படிப்பாக படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் என்.ஏ.சி மற்றும் என்.சி.டி.வி.டி. பயிற்சிச் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும.

வயது வரம்பு

பொது பிரிவினர் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. ஓ.பி.சி பிரிவினர் 31 வயதுடையவர்களும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 33 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு மற்றும் உடல்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 15 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவல் பெற www.halindia.com என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Accessories Division, Hindustan Aeronautics Limited (HAL), Lucknow has published notification for the recruitment of 173 Operator vacancies in various trades on tenure basis.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia