எச்ஐஎல் நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக ஆசையா?

Posted By:

சென்னை: ஹிந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ் நிறுவனத்தில் (எச்ஐஎல்) உதவிப் பொறியாளர்(மெக்கானிக்கல்) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தப் பணியிடங்களுக்குத் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தப்பணியிடத்துக்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். மேலும் கெமிக்கல் தொழிற்சாலைகளில் 2 ஆண்டு பணிபுரிந்த அனுபவமும் இருக்கவேண்டும்.

எச்ஐஎல் நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக ஆசையா?

வயது 40-க்குள் இருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டிசி, ஓபிசி பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு.

இந்தப் பணியிடங்களுக்கு Dy. General Manager (P&A), Hindustan Insecticides Limited, Udyogamandal P.O, Eloor, Ernakulam District, Kerala State Pin-683 501 என்ற முகவரிக்கு டிசம்பர் 31-க்குள் தபால் மூலம்விண்ணப்பிக்கவேண்டும்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது இந்த நிறுவனம். இது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அமைந்துள்ளது. 1954-ல் உருவாக்கப்பட்டது. தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் உள்ளிட்டவற்றுக்காக இது தொடங்கப்பட்டது. இதன் பின்னர் பூச்சிக் கொல்லிகள் கண்டுபிடிப்பு உள்ளிட்டவற்றை இது வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது. தற்போது கொச்சி, மும்பை அருகே ரசாயனி, பஞ்சாபில் பதிண்டா நகரங்களில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளது எச்ஐஎல்.

English summary
Hindustan Insecticides Limited (HIL), Kerala invited applications for the post of Assistant Engineer (Mechanical). The eligible candidates can apply to the post through the prescribed format on or before 31 December 2015. Hindustan Insecticides Limited, Kerala (HIL)Vacancy Details Assistant Engineer (Mechanical)-01 Post Eligibility Criteria for Assistant Engineer (Mechanical) Job 2015 Educational Qualification: Candidates must possess degree in Mechanical Engineering. Two years experience in repair & maintenance of plant and Machinery in Chemical plants.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia