அமெரிக்கா, பிரிட்டனை விட ஜப்பானில் குறைந்த செலவில் உயர்கல்வி பயிலலாம்!!

Posted By:

சென்னை: அமெரிக்கா, பிரிட்டனை விட ஜப்பானில் குறைந்த செலவில் உயர்கல்வி பயிலலாம் என்று தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலவேண்டும் என்பது ஒவ்வொரு மாணவர்களுடைய தீராத ஆசையாக இருக்கும். சமீப காலமாக வெளிநாடு சென்று உயர்கல்வியைப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் இந்தப் படிப்புகளுக்கு அதிகம் செலவாவதாகத் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அதே படிப்பை ஜப்பானில் மிகக் குறைந்த செலவில் படித்து முடிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் படிப்பதற்கு ஆகும் செலவை விட ஜப்பானில் இரண்டு அல்லது மூன்று மடங்கு குறைவான செலவே ஆகும் என்று தெரியவந்துள்ளது.

சமீபத்தில் குஜராத் மாநலம் ஆமதாபாத் நகரிலுள்ள மையத்தில் நடைபெற்ற ஆமதாபாத் கல்விக் கண்காட்சியில் இந்தத் தகவல் தெரியவந்தது. ஆமதாபாத் நிர்வாகச் சங்கம் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கண்காட்சியில் பேசிய இந்தியாவுக்கான ஜப்பான் தூதரக அதகாரி டைசுக்கே கொடாமா கூறியதாவது: ஜப்பானில் அரசு பல்கலைக்கழகங்கள் 90-ம், 80 தேசியப் பல்கலைக்கழகங்களும், 600 தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. உயர் கல்வி பயில ஜப்பானில் ரூ.10 லட்சம் முதல் ரூ.13 லட்சம் செலவாகிறது. இதில் விடுதிக் கட்டணமும் அடங்கும். மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுக் கட்டணத்தை ஜப்பான் பல்கலைக்கழகங்கள் தள்ளுபடி செய்து விடுகின்றன.

ஜப்பான் மொழி தெரிந்திருந்தால் இங்கு படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஜப்பான் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றார் அவர்.

English summary
Cost of Studying in Japan is Much Lesser than Studying in US or UK Cost of studying in Japan is less than studying in US or UK. If you are of the thought that you must know Japanese language in order to study in Japan, then you e are wrong, like many other people. Above facts are enough for any international student to consider Japan as their study centre. Cost of education in US universities or UK universities is 2 or 3 times more than cost of studying in a Japanese university.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia