உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு.. இன்று!

Posted By:

சென்னை : ஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வு திருவள்ளுவர் லட்சுமி நகராட்சி உயர்நிலை அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மே 19ந் தேதி தொடங்கியது. இந்த மாதம் 31ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே 19ல் தொடங்கியது. இந்த மாதம் 31ந் தேதி முதல் நடைபெறுகிறது. மேலும் மே 19ந் தேதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு.. இன்று!

மே20ந் தேதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. மே 20ந் தேதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்தது. இன்று மே 22ந் தேதி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

இன்று மே 23ந் தேதி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடை பெற உள்ளது.

மே 24ந் தேதி மேல்நிலைப் பள்ளி, முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்) கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மே 25ந் தேதி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மே 27ந் தேதி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

மே 28ந் தேதி உடற்கல்வி, கலை, இசை, தையல் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

மே 29ந் தேதி பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் (மாவட்டத்திற்குள்) கலந்தாய்வு நடைபெறுகிறது.

மே 30ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு நடைபெறுகிறது.

மே 31ந் தேதி இடைநிலை உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த தகவலை திருவள்ளுர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

English summary
Change the location of the author Counseling Started on May 19th. This will take place on 31st of this month

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia