பள்ளிகளின் அடிப்படை வசதிக்கு அரசு செய்தது என்ன உயர்நீதிமன்றம் கேள்வி !!

Posted By:

சென்னையில் ஜாக்டோ ஜியோவுடன் அரசுப் பணியாளர்களுக்கு உடனடியாக செவி சாய்த்த தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி கிருபாகரன் .

உயர்நீதிமன்றம் தமிழக அரசை கேள்வியால் துளைப்பு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக அரசை ஆசிரியர்கள் பணியாளர்கள் செய்த போராட்டத்துக்கு உடனே செவி சாயத்தது அரசு ஆனால் ஏன் அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு குறித்து உடனடியாக முடிவெடுத்து செயல்ப்படவில்லையென கேள்வி எழுப்பியது .

தமிழ் பள்ளிகளின் கட்டடிங்கள் அவர்களின் அடிப்படை வசதிகளை சரியாக அமைத்து தர அரசு ஏன் இவ்வளவு தாமதம் காட்டுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக அரசை நைய புடைத்தார் .

தமிழக அசிரியர்கள் தேவைக்கும் அவர்களது போராட்டத்திற்கும் உடனடியாக செவிமடுத்தது . ஆனால் நீட்தொடர்பான சிக்கல்களில் விரைந்து பணியாற்றவில்லை முடிவுகளை தாமதமாக எடுத்ததன் விளைவாக இப்போது அனிதா என்ற மாணவியை இழந்து பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலையில் இருக்கின்றது என்றார் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் .

அரசியல்வாதிகளை விமர்சனம் செய்தால் நடவடிக்கை எடுக்கும் அரசு நீதித்துறையை விமர்சித்தவர்களுகெதிராக எடுத்த நடவடிக்கையாது என கேள்வி எழுப்பி சாட்டையடி அடித்துள்ளார் நீதிபதி . மேலும் நீதிமன்றத்தையும் தன்னையும் விமர்சித்தவர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் விவரங்களை கேட்டுள்ளார் .

பள்ளி  கட்டிடங்கள் மற்றும்  மாணவர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வது குறித்து அரசு என்ன செய்யவிருக்கின்றது என்ற கேள்வியால் தமிழக அரசு முழிப்பிதுங்கியுள்ளது . இதுகுறித்து பதிலளிக்க வேண்டிய நிர்பந்ததில் உள்ளது தமிழக அரசு . எதிர்நோக்குவோம் தமிழக அரசு விடுக்கும் பதில் என்னவாக இருக்குமென்று , நேர்முறை பதிலுடன் செயலாக்கம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக மாணவர்கள் .

சார்ந்த பதிவுகள்:

பிளஸ்2 படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்கலாமே? உயர் நீதிமன்றம் கேள்வி 

English summary
here article tell about tamilnadu government actions regarding school structure

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia