ஹரியாணா மாநில 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...!!

Posted By:

சண்டீகர்: ஹரியாணா மாநில 10, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இந்தத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்ததும் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

ஹரியாணா மாநில 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...!!

இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bseh.org.in/home/ என்ற இணையதளத்தில் ஹரியாணா மாநில பள்ளிக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

முடிவுகளைப் பெற 'Results' என்ற பகுதியில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் பதிவு எண், பெயர் போன்ற விவரங்களைக் கொடுத்து மதிப்பெண்களைப் பெறலாம்.

மதிப்பெண்கள் தோன்றியதும் அதைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலப் படிப்புகளுக்குப் பயன்படுத்தலாம்.

English summary
The Haryana Board of Secondary Education has declared Haryana Open School Secondary and Senior Secondary class examination (class 10 and class 12 ) results 2016 on the official website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia