தொழில்முனைவோருக்கு உதவ ஹார்வர்ட் பல்கலை.யுடன் டெல்லி ஐஐடி ஒப்பந்தம்!!

Posted By:

சென்னை: தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன், டெல்லி ஐஐடி, டாடா டிரஸ்ட் ஆகியவை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் பொருட்டு இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. இதற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய இன்ஸ்டிடியூட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 25 தொழில்முனைவோருக்கு இந்த உதவிகள் செய்யப்படும்.

தொழில்முனைவோருக்கு உதவ ஹார்வர்ட் பல்கலை.யுடன் டெல்லி ஐஐடி ஒப்பந்தம்!!

இதற்காக தெற்காசிய இன்ஸ்டிடியூட்டுக்கு மானியத்தை டாடா டிரஸ்ட் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் நீதி ஆயோக் ஆணையத்தின் தலைவர் தருண் கன்னா கூறியதாவது:

அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்புகள் இந்தியாவில் தேவை. ஆனால் இவ்வளவு குறைந்த காலத்தில் இத்தனை வேலைவாய்ப்பகளை உருவாக்குவது மிகவும் கடினம். எனவே எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.

இதுகுறித்து டாடா டிரஸ்ட் செயல் அறங்காவலர் ஆர். வெங்கட்ராமன் கூறியதாவது: ஹார்வர்ட் பல்கலைக்கழகம், டெல்லி ஐஐடி உதவியுடன் நாஙகள் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டில் போதுமான தொழில்முனைவோர்களை உருவாக்கி அதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் எங்களது திட்டம் என்றார் அவர்.

English summary
Harvard University's South Asia Institute has joined hands with the Indian Institute of Technology, Delhi, and Tata Trusts in a first initiative of its kind to mentor 25 social entrepreneurship startups in science and technology. The project, led by the institute director Tarun Khanna, aims to create jobs by helping these startups with mentoring, workshops and providing grants to select ventures.The institute, a research and idea generation centre at Harvard University, requested and received a grant from Tata Trusts to experiment with ways to translate knowledge that was generated in the university setting into livelihood creation.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia