பொறியாளர்கள் தினம்: ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் சுமார் 1.5 மில்லியன் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனர்.
]இது, ஐஸ்லாந்தின் மக்கள் தொகையை விட, இரண்டு மடங்கு அதிகமாகும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆகனும் யூத்ஸ்...!

நாட்டின் வளர்ச்சியில், பொறியாளர்களின் பங்களிப்பு என்பது அளப்பரியது. அத்தகையவர்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ம் தேதி, 'பொறியாளர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.
'சர் எம்வி' என்று பிரபலமாக அறியப்படும் இந்தியாவின் பொறியியல் முன்னோடியான, 'சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா' பிறந்த நாளை தான், ஆண்டு தோறும் பொறியாளர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
பொறியியல் என்றால் என்ன?
அறிவியல், கணிதவியல் கோட்பாடுகளை திறமுடன் கையாண்டு, தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற்பாட்டு கலை பொறியியல் ஆகும்.
பொறியாளர்கள் தினம்
இந்தியாவில், 'பொறியாளர்கள் தினம்' ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி,'பாரத ரத்னா' சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் நினைவாக கொண்டாடப்படுகிறது.
பொறியாளர், சிறந்த அறிஞர், அரசியல்வாதி என, பன்முக தன்மையை கொண்ட அவர் ஒரு மிகவும் புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார்.
பொறியாளர்கள் தினம், முதன்முதலில் 1968 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பொறியாளர்கள் கொண்டாடும் மிக முக்கியமான நிகழ்வுகளில், இதுவும் ஒன்றாகும்.
ஏன் கொண்டாடுகிறோம்?
'சர் எம்வி' என்று அழைக்கப்படும் சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா, பொறியியல் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில், அவரது மகத்தான பங்களிப்புகள், கண்டுபிடிப்புகள் காரணமாக, 'இந்திய பொறியியலின் தந்தை' என்று கருதப்படுகிறார்.
அவரது சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில், அவரது சிறப்பான பணி, சாதனைகள் வாயிலாக, எதிர்கால தலைமுறையை ஊக்குவிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதியை, 1968 முதல் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
சர் எம்வி யார்?
சர் எம்வி, செப்டம்பர் 15, 1861 இல் பழைய மைசூர் மாநிலத்தின் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் உள்ள முட்டனஹள்ளி கிராமத்தில் பிறந்தார்.
முட்டனஹள்ளி கிராமத்தில் பிறந்தாலும், இவரது முன்னோர்கள் ஆந்திர மாநிலத்தின் மோக்சகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதனால் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்று பெயர் சூட்டினார்கள். 12 வயதிலேயே தந்தையை இழந்ததால், மிகவும் கஷ்டப்பட்டு கல்வியைத் தொடர்ந்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் புனே அறிவியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பட்டத்தையும் பெற்றார். Who is the 1st engineer of India?

சர் எம்வி சாதனைகள்
நீர்ப்பாசன தடுப்பு அமைப்பு, வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், நீர்மட்டத்தை உயர்த்தாமல், அதிகப்படியான நீர் வரத்தை பாதுகாப்பாக கடந்து செல்வதற்காக, அணைகளுக்கான தானியங்கி கதவுகளின் புதுமையான வடிவமைப்பை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார்.
கண்டுபிடிப்புகள் வாயிலாக மிகவும் பிரபலமான அவரின் தானியங்கி கதவுகள், 1903ல் கடக்வாஸ்லா நீர்த்தேக்கத்தில் பொருத்தப்பட்டது.கடந்த 1915 ஆம் ஆண்டில், சுதந்திரத்திற்குப் பின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் 'நைட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் இந்தியன் எம்பயர்' என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
அவரது ஈடு இணையற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், அவருக்கு 1955 ஆம் ஆண்டு, உயரிய விருதான, 'பாரத ரத்னா'வை, இந்திய அரசு வழங்கியது.
அரசாங்கப் பணியில் இருந்தாலும், புதிய விஷயங்களைச் செய்து பார்ப்பதில் ஆர்வமாக இருந்த விஸ்வேஸ்வரய்யா, பாசனத்துக்கான புதிய முறையை உருவாக்கியவர்.
காவிரி ஆற்றின் குறுக்கே இவரால் கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை, அப்போது ஆசிரியாவிலேயே மிகப் பெரிய அணையாக இருந்தது.
இது, விஸ்வேஸ்வரய்யாவுக்குப் புகழைத் தேடித் தந்தது. 1894-ம் ஆண்டு மைசூருக்கு அருகில் ஆசிரியாவிலேயே முதல் நீர்மின் உற்பத்தி ஆலையை அமைக்கக் காரணமாகவும் இருந்தார்.
விருப்ப ஓய்வுக்குப் பிறகு மைசூர் மன்னரின் திவானாகப் பணியாற்றினார். பத்ராவதி எஃகு ஆலை, மைசூர் பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள், அரசு பொறியியல் கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார்.
'நவீன மைசூர் அரசின் தந்தை' என்று அழைக்கப்பட்ட விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ல், கர்நாடகாவில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
'இந்தியப் பொறியியலின் தந்தை' என்று கொண்டாடப்படும் விஸ்வேஸ்வரய்யா, ஏப்ரல் 12, 1962 அன்று 101 வயதில் மறைந்தார்.
இருப்பினும், இன்றும் அவர் உருவாக்கிய அணைகளும், தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் அவரது புகழை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று அவருக்கு 162-வது பிறந்த நாள்.
2018 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனம் சர் எம்வி பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், 157 பிறந்தநாளில் ஒரு டூடுலை வெளியிட்டது.
அதன் வெளிப்பாடால், டாடா ஸ்டீல் பொறியாளர்கள் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களை தாங்கும் கவச வாகனத்தை கண்டுபிடித்தனர். தகவலுக்காக சொல்லுகிறோம் யூத்ஸ்...!
எப்போது கொண்டாடுவர்
பெரும்பாலான நாடுகள் தங்கள் உள்ளூர் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தின்படி, வெவ்வேறு தேதிகளில் பொறியாளர் தினத்தை கொண்டாடுகின்றனர்.
மெக்சிகோ நாடு, ஜூலை 1 அன்று பொறியியல் தினத்தை கொண்டாடுகிறது.
இலக்கு அவசியம்
2017-2018 கல்வியாண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் சுமார் 10,396 பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ.,யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கல்லூரிகள் எண்ணிக்கையும், பொறியாளர்கள் எண்ணிக்கையும் முக்கியம் இல்லை என்பதையும், நாம் நினைவில் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
முதல் இடத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்து பெயரளவுக்கு படித்து விட்டு, நானும் பொறியியல் பட்டதாரி என்று மார் தட்டி கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பு, புதிய புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக ஆற்றும் வகையிலான சிறந்த பொறியாளராக ஆக வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி, பொறியியல் படிப்பை நிறைவு செய்யுங்கள் 'இன்ஜினியர்ஸ்'

ஹாப்பி இன்ஜினியர்ஸ் டே...!
ஒவ்வொரு ஆண்டும் சர்.எம்.வி.யின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தையும், பொறியியல் துறையில் அவர் செய்த பல்வேறு சாதனைகளையும் எடுத்துரைக்கும் சிறப்புரைகள், சொற்பொழிவுகள் மற்றும் கருத்தரங்குகள், அந்தந்த களத்தின் முக்கிய நபர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், நிகழாண்டும் சிவில் மற்றும் பிற பொறியியல் துறைகளில் பணிபுரியும் நிறுவனங்களில் கருத்தரங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒரு நாள் மட்டும் முக்கிய நபர்களை நினைவு கூர்ந்துவிட்டு, இன்றைய இளைய தலைமுறை நகராமல், அவர் செய்த சாதனைகள், பங்களிப்பை நாமும் செய்ய முயற்சிப்போம் என்ற உறுதி மொழியுடன் கல்வி நிறைவு செய்து, வெற்றி பயணத்தை தொடங்கவும் முயற்சிக்க வேண்டும் யூத்ஸ்...!
What is Engineering ?, #Engineering #பொறியியல், Happy Engineers Day
வாழ்த்து சொல்லுவோமா...!
பொறியியல் முடிவடையும் இடத்தில் கட்டிடக்கலை தொடங்குகிறது. அனைத்து இன்ஜினியர்களுக்கும் இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
இன்ஜியர்கள் இல்லையென்றால் இவ்வுலகில் நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமில்லை. இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
உலகிற்கு தேவையான பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வழங்கும் இன்ஜினியர்களுக்கு இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
பொறியாளர் தின நல்வாழ்த்துக்கள்
இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
எங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே மாற்றிய உங்கள் சிறந்த யோசனைகள் மற்றும் புதுமைகளுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். பொறியாளர் தின வாழ்த்துக்கள்!
பொறியாளர்கள் இல்லாமல் எந்த நாடும் முழுமையடையாது. அனைத்து இன்ஜினியர்களுக்கும் இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
உலகத்தால் நம்மை மாற்ற முடியாது, ஆனால் நம்மால் உலகை மாற்ற முடியும்! உங்களிடம் புத்தகங்கள் இல்லை, ஆனால் மனதில் புரட்சிகர யோசனைகள் உள்ளன! இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்
நற் கருத்துகள்
பொறியியல் முடிவடையும் இடத்தில் கட்டிடக்கலை தொடங்குகிறது. - வால்டர் க்ரோபியஸ், ஜெர்மன் கட்டடக் கலைஞர்
பொறியியல் என்பது ஆக்கபூர்வமான, நடைமுறை தீர்வுகளைக் கண்டறிய அறிவியலைப் பயன்படுத்துவதாகும். இது ஒரு உன்னதமான தொழில் - ராணி எலிசபெத்- II
மென்பொருள், கலைத்திறன் மற்றும் பொறியியல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சிறந்த கலவையாகும் - பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர்
நாங்கள் உலகை உருவாக்குகிறோம் - சிவில் இன்ஜினியர்
நாங்கள் மாய உலகத்தை உருவாக்குகிறோம் - கம்யூட்டர் இன்ஜினியர்
நாங்கள் உலகை இணைக்கிறோம் - எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியர்.
நாங்கள் உலகின் சக்திகள் - மின்பொறியாளர்
நாங்கள் உலகை நகர்த்துகிறோம் - மெக்கானிக்கல் இன்ஜினியர்


Click it and Unblock the Notifications












