அரசு தொழில்நுட்பத் தேர்வுகள்: ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்

Posted By:

சென்னை: அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நவம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ள அரசுத் தொழில்நுட்பத் தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விவசாயம், அச்சுக்கலை பிரிவுப் பாடத் தேர்வு எழுதும் தேர்வர்கள், அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர் மூலம் செய்முறைத் தேர்வு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மாதிரி அமைத்தல் (மாடலிங்) தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தேர்வுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தேர்வு மையத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத் தேர்வுகளுக்கான கால அட்டவணை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Directorate of Government Exams has announced that the Hall tickets for Technical exams is ready to download. Aspirants can logon into www.tndge.in for downloading.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia