பிளஸ்2 மாணவர்களுக்கான துணைதேர்வு எழுத ஹால்டிக்கெட் பெறலாம் !!

Posted By:

பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைதேர்வு எழுத அனுமதிசீட்டை பெறலாம் . தமிழகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் துணை தேர்வு எழுத விண்ணப்பித்த பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைதேர்வுக்கான அனுமதி சீட்டை இணைய தளத்தில் திங்கள் கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .

செப்டம்பர் 18 இன்று மதியம் 2 மணிக்கு மேல் தேர்வுதுறை இயக்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் அனுமதிசீட்டை பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை கொடுத்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .

பிளஸ்2 மாணவர்களுக்கான துணைதேர்வு எழுத  தேர்வுமையம் ஹால்டிக்கெட்   ரெடி

எழுத்துதேர்வுக்கு எழுத்து தேர்வு செய்முறை தேர்வில் அடங்கிய பாடங்களில் 40 மதிபெண்களுக்கு குறைவாக பெற்றவர்கள் துணை தேர்வினை கட்டாயமாக எழுத வேண்டும் . மாணவர்கள் தேர்வுக்கு மீண்டும் வருவதுடன் செய்முறை தேர்வை மீண்டும் செய்ய வேண்டும் .

அதிகபட்சம் 200 மதிபெண் செய்முறை கொண்ட பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் இப்பாடத்தை திரும்ப எழுத வேண்டும் . மொழிப்பாடத்திற்கான பேசுதல் , கேட்டல் திறன் , சிறப்பு மொழிப்பாடத்தில் செய்முறை தேர்வு குறித்து தனிதேர்வர்கள் தாம் தேர்வு எழுதும் தேர்வு மையத்தின் முதண்மை கண்காணிப்பாளரை கண்டு விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும் .

பிளஸ் 2 மாணவர்களுக்கான துணை தேர்வு எழுதுமுறை மாணவர்களின் வருங்காலத்தை காக்கின்றது . பள்ளிநிற்றலை நிறுத்துக்கிறது மேலும் தனிதேர்வு எழுதுவோர்கென்று தனிவாய்ப்பாக இருக்கின்றது . இத்தேர்வுக்கு சிறப்பு தட்கல் முறையிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . துணை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டின்றி தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் . 

சார்ந்த பதிவுகள் :

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைதேர்வு அனுமதி சீட்டு வெளியீடு

மத்திய அரசின் கல்விஉதவி தொகையை பெற விண்ணப்பிக்கவும் 

English summary
here article tell about hall tickets for supplementary exam of 12 students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia