மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு

Posted By:

சென்னை, செப். 8: சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு உதவும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தேர்வுக்கான புகைப்படம், கையெழுத்துடன் கூடிய ஹால் டிக்கெட்டுகள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஹால் டிக்கெட்டுகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், வரும் 11-ஆம் தேதிக்குள் அதை தேர்வுப் பிரிவில் ஆசிரியர்கள் தெரிவித்து, அந்த குறைகளை நீக்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேதிக்குப் பின்னர் விவரங்களைத் திருத்த அனுமதி வழங்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவிப்பு செய்துள்ளது.

English summary
Hall Tickets for Central Teacher Eligibility Test (CTET) has been Released by Central Board of Secondary Education (CBSE) in the Internet.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia