அண்ணாமலைப் பல்கலை... தொலைதூரக் கல்வி இயக்கக தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

Posted By:

சென்னை : அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேசிய தரமதிப்பீட்டு குழுவினரால் 'ஏ' தரச்சான்று அந்தஸ்து பெற்ற மாநிலப் பல்கலைக்கழகம். இதில் 2017ம் ஆண்டு தொலைதூரக் கல்வி இயக்கக தேர்வர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்க தேர்வுகள் 19 மே 2017ந் தேதி அன்று துவங்குகின்றன. தேர்வுகள் நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெறும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்க தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதளம்

தேர்வுகளுக்கு பதிவு செய்துள்ள தேர்வர்கள் அவர்களுக்குரிய தேர்வு மையங்களைப் பற்றிய விபரங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து www.annamalaiuniversiyt.ac.in அறிந்து கொள்ளலாம்.

தகவல் மையங்கள்

இந்த விபரங்களை அருகிலுள்ள பல்கலைக்கழக படிப்பு மற்றும் தகவல் மையங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். செய்முறை மற்றும் வாய்வழி தேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

ஹால் டிக்கெட்

தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை (ஹால் டிக்கெட்) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து (www.annamalaiuniversiyt.ac.in) 10.05.2017 இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு அறைக்கட்டுப்பாடு

மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். (மின்னணுப் பொருள்கள் தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.) இந்த அறிவிப்பை தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர். இராம. சந்திரசேகரன் மற்றும் பதிவாளர் முனைவர். க. ஆறுமுகம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

English summary
Announcements of exam centers for examination centers are available at Annamalai University www.annamalaiuniversiyt.ac.in from the website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia