சென்னை: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடக்கிறது.
இந்தத் தேர்வுக்கென 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தயாராக உள்ளன. இந்த நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












