முதுநிலை படிப்புகளுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு: ஹால் டிக்கெட் தயார்!!

Posted By:

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பு பயில உதவும் நுழைவுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவை சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு 2016-17-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப்ரவரி 14) நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது.

முதுநிலை படிப்புகளுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு: ஹால் டிக்கெட் தயார்!!

அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வறை அனுமதிச் சீட்டை(ஹால் டிக்கெட்), நேற்று முதல்(பிப்ரவரி 11) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் மாணவர்கள், தங்களுக்கு தேர்வுக்குழுவால் வழங்கப்பட்டுள்ள "ரேண்டம்' எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு எழுதச் செல்லும்போது இந்த ஹால் டிக்கெட்டைக் கட்டாயம் கொண்டு செல்லவேண்டும் என மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

English summary
Tamilnadu Medical education Directorate has announced tha the hall ticket for Medical entrance exams is ready. Students can download the hall tickets from the site, www.tnhealth.org

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia