பத்தாம் வகுப்பு தனித்தேர்வர் ஹால் டிக்கெட்: பிப். 8 முதல் பதிவிறக்கம் செய்யலாம்!!

Posted By:

சென்னை: வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வரும் 8-ம் தேதி முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர் ஹால் டிக்கெட்: பிப். 8 முதல் பதிவிறக்கம் செய்யலாம்!!

இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் ஏராளமான தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அவ்வாறு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தேர்வுத் துறை இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை டைப் செய்து வரும் பிப்.8-ம் தேதி முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Government exams Directorate has announced the private students who have applied for the 10th standard exams private can download their hall tickets from feb 9.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia