அரையாண்டு தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான மாணவர்கள் குறிப்பு

Posted By:

அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன நாளை முதல் தமிழக மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் தொடங்க போகின்றது. என்ன மாணவர்களே படிச்சிட்டிங்களா எப்படி படிப்புகள் போய்கின்றன.

அரையாண்டு தேர்வுக்கான குறிப்புகளை படிங்க  தேர்வை வெல்லுங்க

தமிழகத்தில் நாளை 7/12/2017 வியாழன் அன்று தமிழ்நாட்டில் 6 வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. அனைத்து மாணவர்களும தேர்வு ஜுரத்தில் இருக்கின்றனர். இன்று முதல் மாணவர்கள் தேர்வுக்காக தங்களை தயார் செய்ய தொடங்கியிருப்பார்கள்.

கேள்வித்தாள்கள் அச்சிட்டு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று முடிவடைந்துவிட்டது . மாவட்டம் தோறும் அவற்றை பிரித்து கொடுக்கும் பணிகள் நடை பெறுகின்றன. தேர்வுத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

டிசம்பர் 11 முதல் 23 வரை பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 11 முதல் 23 வரை பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதற்கு பிறகு விடுமுறை அறிவிக்கப்படும்.

அறையாண்டு தேர்வுக்கான மாணவர்களுக்கு குறிப்பு :

அறையாண்டு தேர்வினை மாணவர்கள் எவ்வாறு சமாளிப்பது என்ற குழப்பம் , தேர்வு நேர படப்படப்பும் இருக்கின்றதா. மாணவச் செல்வங்களே தேவையற்ற குழப்பத்தையும் படப்படப்பையும் விடுங்கள்.

தேர்வுக்கான பேனா, பெண்சில், கணித உபகரணங்கள் முறையாக இன்றே வாங்கி வைத்து கொள்ளுங்கள். அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தி பாருங்கள், ஆனால் பேனாவை மட்டும் தேர்வுக்கு முன்பே வாங்கி எழுதி பழக்கி கொள்ளுங்கள் அப்பொழுதான் உங்களது வேகத்தில் பேனா பயணிக்கும்.

நாளை தேர்வு என்பதால் இன்று மாங்கு மாங்கு என்று 12 மணி வரை படிக்க வேண்டாம். 11 மணிக்கு உரங்க செல்லுங்கள் காலை 5 மணிக்கு எழுந்திருத்து படிக்கவும்.

தேர்வு நேரத்தில் வெளியில் சாட் அயிட்டங்களை சாப்பிடும் பழக்கங்களை நிறுத்தவும். தேர்வு நேரத்தில் தொலைக்காட்சிகள் ,பேஸ்புக், வாட்ஆப் மற்றும் மொபைல் போன்களை தொலைவில் வைக்கவும். தேர்வு முடிந்தபின்பு அவற்றை பயன்படுத்தவும்.

தேர்வு நேரத்தில் போக்கு வரத்து நெருசலில் மாட்டிகொள்வதை தவிர்த்து தேர்வு காலங்களில் சீக்கிரமாகவே பள்ளிக்கு சென்று விடுங்கள், தேர்வு சீருடை மற்றும் அத்துடன் ஸ்கூல் பேக் போன்றவற்றை முன்பே தயாராக வைக்கவும்.

பெற்றோர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் நடத்துவதை நிறுத்தவும். பெற்றோர்களிடம் தேர்வு குறித்து முன்னமே அறிவித்து விடுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்தையும் உங்களுக்கு முன்பாகவே எடுத்து வைத்து விடுவார்கள்.

காலையில் வேலை செய்து படிக்கும் மாணவர்கள் நேரமேலாண்மை உங்களு நன்றாக தெரியும் வழக்கத்துக்கு மாறாக தேர்வு காலங்களில் உங்களின் வேலைகளை சற்று முன்னமே முடித்து தேர்வுக்கு செல்லவும்.

எண்ணெய் பலகாரங்களை தேர்வு கலங்களில் சாப்பிடலாம் ஆனால் அளவாக சாப்பிடவும். பயணங்களில் கவனமுடன் இருக்கவும். தேர்வை வெல்ல சுமார்ட் வொர்க் செய்து வெல்லவும் வாழ்த்துக்கள்

சார்ந்த பதிவுகள் :

பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான மாதிரிவினா வெளியிடுவதில் தாமதம் 

பத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

English summary
here article tell about half yearly exams for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia