பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தில் டாக்டர்களுக்கு வேலை!!

Posted By:

சென்னை: பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) சீனியர் மருத்துவ அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 2-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 2 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தில் டாக்டர்களுக்கு வேலை!!

இந்தப் பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பு மட்டுமல்லாது ஆப்தல்மாலஜி-யில் பி.ஜி. படிப்பு படித்திருக்கவேண்டும். சம்பளம் ரூ. 20600-46500 என்ற விகிதத்தில் இருக்கும்.

வயது 45-க்குள் இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு சலுகை உண்டு.

இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்கள் பெங்களூரு எச்ஏஎல், லக்னோ எச்ஏஎல் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பங்களை Chief Manager (HR) Hindustan Aeronautics Limited, Accessories Division, HAL Post Office, Lucknow (U.P.) - 226016 என்ற முகவரிக்கு மார்ச் 2-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

பெங்களூரு எச்ஏஎல் நிறுவனமானது, ஹெலிகாட்பர்கள், விமானங்களைத் தயாரித்து அளிக்கும் பொதுத்துறை நிறுவனமாகும். ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பு, பயிற்சிகளையும இது அளித்து வருகிறது.

வேலை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.hal-india.com என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

English summary
Hindustan Aeronautics Limited invites application for the post of 2 Senior Medical Officer. Apply before 02 March 2016. Advt. No. : HAL-ADL/1211/HR/R/2016/01 Vacancy Details : Post Name : Senior Medical Officer (Ophthalmology) No. of Vacancy : 1 Post Pay Scale : Rs. 20600-46500/- Post Name : Senior Medical Officer (Physician) No. of Vacancy : 1 Post Pay Scale : Rs. 20600-46500/- Eligibility Criteria Educational Qualification : MBBS with Post Graduate Degree in Ophthalmology / Medicine or MBBS with Post graduate Diploma in Ophthalmology/ Medicine with one year experience or MBBS with two years experience.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia