குஜராத் மாநில மருத்துவ நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!!

Posted By:

சென்னை: குஜராத் மாநில அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு(குஜ்செட்- GUJCET) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் மே 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில மருத்துவ நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!!

இந்தத் தேர்வை குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் பொறியியல், பிஸியோதெரப்பி, மருத்துவப் படிப்புகளில் சேர முடியும்.

இந்தத் தேர்வானது 120 கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். இயற்பியல், வேதியல் உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 40 கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் கொண்டதாகத் தேர்வு இருக்கும். தவறான விடைகளுக்கு 0.25 சதவீத மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

English summary
GUJCET exam dates has been released. The state level medical entranceexamination is scheduled to be held on May 10. Gujarat Secondary and Higher Secondary Education Board will be conducting the entrance exam. GUJCET exam will be conducted to offer admission into engineering, physiotherapy and alternative medical programmes to various government/ government aided universities and private colleges/ institutes across Gujarat.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia