குஜராத் பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் சர்வதேச விருது!!

Posted By:

சென்னை: கல்வித்துறையில் சிறந்த விளங்கியமைக்காக குஜராத்திலுள்ள பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் சர்வதேச விருது(ஐஎஸ்ஏ) கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலம் வடோதராவிலுள்ள விப்ஜியார் மேல்நிலைப்பள்ளி இந்த விருதைப் பெற்றுள்ளது.

குஜராத் பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் சர்வதேச விருது!!

இந்த விருது 2015-2018 வரை மதிப்புடையதாக இருக்கும் என்று பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு இதுபோன்ற 3 ஆண்டு விருதுகளை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இளைஞர்களிடையே கல்வியை மேம்படுத்துவதிலும், பயிற்றுவதில் திறம்படச் செயல்படுவதிலும், மாணவர்களிடையே உலக அளவிலான குடிமக்கள்தன்மை பிரதிபலிப்படையச் செய்வதிலும் இந்தப் பள்ளிச் செய்துள்ளதால் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த விருதை 2003-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கி வருகிறது. இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்த விருதைப் பெற்றுள்ளன. இந்தத் தகவலை விப்ஜியார் பள்ளி முதல்வர் திலீப் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

English summary
Vadodara, Gujarat based Vibgyor high school has received the British Council international school award (ISA) for 'outstanding development of the international dimension in the curriculum'. The award is valid for three years, starting from 2015 till 2018. The school will be felicitated at an award function that will be held later this year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia