டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு

Posted By:

போட்டி தேர்வர்களே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குருப் 4 மற்றும் விஏஒ பணிகளுக்கான தேர்வுகள் ஒன்றினைக்கப்பட்டு ஒன்றாக கம்பைனைடு சிவில் சர்வீஸ் தேர்வு குரூப் 4 தேர்வு என்ற பெயரி நடத்துவதாக அறிவித்திருந்தது .
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தமிழ்கத்தில் லட்சகணக்கானோர் படித்து கொண்டிருக்கின்றனர். டிஎன்பிஎஸ்சியை கனவு வாரியமாக கருதி பல மாணவர்கள் படித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆண்டின் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இன்று வெளியான குரூப் 4 நோட்டிஃபிகேசனில் குரூப் பணிகளாக கிளார்க் மற்றும் பில் கலெக்டர் அத்துடன் கிராம நிர்வாக அலுவலர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிக்கை விண்ணப்பிக்கவும்

குரூப் 4 மற்றும் விஏஒ பணிகளுக்கான தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தது. 2017 ஆம் ஆண்டான இவ்வாண்டு முதல் குரூப் 4 பணியிடங்கள் அத்துடன் விஏஒ போன்ற பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 4 தேர்வுக்கு பத்தாம் வகுப்பு படித்திருத்தல் போதுமானது ஆகும். 18 வயது முதல் 35 வரை நிரம்பியவர்கள் இத்தேர்வை எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள் . மேலும் பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். குரூப் 4 பணியிடங்களான தட்டச்சு பணியாளர், இளநிலை உதவியாளர் தண்டாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளமாக ரூபாய் 5,200 முதல் 20,200 வரை பெறலாம். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 9,351 ஆகும்.

பணியிடங்கள் விவரம் :

கிராம நிர்வாக அலுவலர் 494

இளநிலை உதவியாளர் 4096
இளநிலை உதவியாளர் 205
வரி தண்டாளர் 48
நில அளவர் 74
வரைவாளர் 156
தட்டச்சர் 3463
சுருக்கெழுத்துத் தட்டச்சர் 815

அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நாள் 14/11/2017
தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்: 13/12/2017
தேர்வு நாள் 12/2/2018
விண்ணப்ப கட்டணமாக டிஎன்பிஎஸ்சியில் ரூபாய் 100 செலுத்த வேண்டும். ஏற்கனவே ஒருமுறை பதிவு செயதவர்கள் 100 செலுத்தினால் போதுமானது. இல்லையெனில் 150 செலுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ இணைப்பையும் கொடுத்துள்ளோம்.

சிறப்பாக படிக்கவும் குரூப் 4 தேர்வுக்கு 100 தமிழ்/ ஆங்கிலம் விருப்பத்தை பொருத்து தேர்வு செய்யலாம். கேள்விகள் 75 பொது அறிவு 25 திறனறிவு அடங்கிய கேள்வி தொகுப்பு 3 மணி நேரம் கொண்டது . கேரியர் இந்தியா உங்களுக்கான பொது அறிவு , நடப்பு நிகழ்வுகள் தமிழ் பகுதிகளிலிருந்து கேள்விகள் தொகுத்து வழங்குகிறோம் . டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தேர்வர்களே உங்களுக்கான அதிகாரப்பூர்வ தளம் அத்துடன் அறிவிக்கை இணைய இணைப்பு அத்துடன் கொடுத்துள்ளோம். விண்ணப்பிப்பதற்கான இணைய இணைப்பும் கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

பொது அறிவு கேள்விகளை எதிர்கொள்ளும் ஞானமே தேர்வை வெல்லும் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க

English summary
here article tell about tnpsc grop 4 notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia