குரூப் 4 தேர்வு எழுதியோர்க்கு முதல்கட்ட கவுன்சிலிங் தேதி ஜூலை 17ல் தொடங்கும் ,

Posted By:

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவருக்கான கவுன்சிலிங் ஜூலை 17 முதல் துவங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது .டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் .
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது நவம்பர் 6ல் நடைபெற்றது அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாயுவு நடக்கும் விவரத்தை டிஎன்பிஎஸ்சி செயலர் அறிவித்தார் .
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 21 வெளியானது இதன் முதல்கட்ட கவுன்சிலிங் ஜூலை 17 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்கிற்கு தேவையான அனைத்து சான்றிதழ்களும் சரியாக வைத்துகொள்ளவும்


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் போன்ற பதவிகளை கொண்டது. இந்த தேர்வு ஒரே எழுத்து தேர்வு மட்டும் கொண்டுள்ளது . கவுன்சிலிங்கில் பங்கேற்கும் போட்டி தேர்வு எழுதியோர் அனைவரும் தங்கள் சான்றிதல்களை சரியாக வைத்து கொள்ளவும் . புகைப்படங்கள் மற்றும் சாதிச்சான்றிதல்கள் விண்ணப்பத்தில் தெரிவித்த அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் .
உங்கள் பகுதி இருப்பிடங்களுக்கேற்ப நீங்கள் சரியான அலுவலர்களிடம் தான் கையெழுத்து வாங்கியிருக்கிறீர்களா என்பதை தெளிவாக அறிந்து தயார்நிலையில் வைத்துகொள்ளவும்.கூடுதல் விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம் .

 

English summary
above article tell about tnpsc group 4 counselling

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia