குரூப் - 3 தேர்வில் வெற்றி பெற்றவர்களா? - சான்றிதழ் சரிபார்க்கும் தேதி அறிவிப்பு

Posted By:

சென்னை : குரூப் - 3, மருத்துவ சார்நிலை பணி மற்றும் குரூப் -3ஏ ஆகிய மூன்று பதவிகளுக்கான போட்டி தேர்வுகளில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் விஜயகுமார் தேதிகளை அறிவித்துள்ளார்.

தடய அறிவியல் மற்றும் இளநிலை அறிவியல் அதிகாரி பணி, மருத்துவ சார்நிலை பணி மற்றும் குரூப் - 3ஏ பிரிவில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணிக்காக தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தடய அறிவியல், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு 30 காலியிடங்களுக்கு 2016, அக்டோபர் 16ல் தேர்வு நடந்தது.

குரூப் - 3 தேர்வில் வெற்றி பெற்றவர்களா?  -  சான்றிதழ் சரிபார்க்கும் தேதி அறிவிப்பு

இந்த தேர்வுக்கு மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மே 5ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலர், விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சார்நிலை பணியில் வட்டார சுகாதார புள்ளியிலாளர் பதவியில் 173 காலியிடங்களுக்கு ஜூன் 5ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 342 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு மே 15 முதல் 19 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் - 3 ஏ

குரூப் - 3 ஏ பிரிவில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில் 24 இடங்களுக்கு 2013, ஆகஸ்ட் 3ல் தேர்வு நடந்தது.

குரூப் 3 ஏ பிரிவில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணிக்கு 34 பேர் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு மே 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government Employee Commissioner has told that Group - 3 and Group 3 A Certificate Verification Date Released.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia